பர்னபாவைப்போல் நாமும் மறைத்தூதுரைப் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள்! கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் வலிமையாக, நாம் செய்தியை உலகின் மூலைமுடுக்குகளுக்கு எடுத்துச் செல்கிறோம்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டில், ‘ கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற விழாவை, பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட அழைப்புவிடுத்ததை நாம் மறந்திருக்கமட்டோம்.