மார்ச் 31, 2017 அன்று, போதைப்பொருள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, பாதுகாப்பான போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல் சர்வதேச போதைப்பொருள் சோதனை தினத்தை நடத்தியது. போதைப்பொருள் சோதனை என்பது, பயனர்கள் தாங்கள் உட்கொள்ள விரும்பும் பொருட்களின் உள்ளடக்கம் மற்றும் தூய்மையைக் கண்டறிய அனுமதிப்பதன் மூலம் போதைப்பொருள் நுகர்வு பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். பாதுகாப்பானவைகளை தேர்வுசெய்யவும், அதிக ஆபத்தான பொருள்களை தவிர்ப்பதற்கும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இருபது நாடுகளில் போதைப்பொருள் சோதனைச் சேவைகள் உருவாக்கப்பட்டும், பல நாடுகளில் பரிசீலிக்கப்பட்டும் வருகின்றன.