புகைபிடிக்காத நாள் | March 09

புகைபிடிக்காத நாள்
        ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (ழே ளுஅழமiபெ னுயல) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் உயிர்கொல்லும் தீங்கினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த அபாயகரமான பழக்கத்திலிருந்து மறுவாழ்வுபெற முயற்சிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
        இந்த நாளில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அன்றாட வாழ்க்கையில் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்துகின்றன. இது புகைபிடிக்கும் நபருக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
        புகைபிடிப்பதன் மற்றொரு மோசமான விளைவு, ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். சிகரெட்டில் உள்ள உயசஉiழெபநn இதற்கு காரணம். இருப்பினும், புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டால், அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை மூன்று முதல் ஆறு மாதத்துக்குள் கணிசமாக மேம்படும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே, ஒரு பெண் புகைபிடித்தால் அது அவளது முட்டைகளையும் கருப்பையையும் பாதிக்கும். எனவே புகைபிடிக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறையும். ஒருவேளை அதிலிருந்து விலகினால், கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
        மேலும் கருச்சிதைவு மற்றும் பிரசவத்தில் பிரச்சனை போன்ற ஆபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சந்தீப் சதாவின் கூற்றுப்படி, ஒரு சிகரெட்டில் 4,000 தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை ஒரு தாயின் இரத்த ஓட்டத்தின் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இது குழந்தைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகள் காரணமாக பிறக்கும் குழந்தை பெரும்பாலும் குறைந்த எடையுடன் பிறப்பது, சுவாச பிரச்சனை மற்றும் முன்கூட்டிய பிரசவம் (Pசநஅயவரசந னுநடiஎநசல) போன்ற விளைவுகளுக்கும் வழிவகுக்கும்.
        சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் மட்டும் புகைபிடிப்பதன் காரணமாக ஆண்டுக்கு 9,30,000 இறப்புகளைக் நேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே, புகைப்பழக்கத்தை விடுவோம். உடல்நலத்தை காப்போம்.