வலி மற்றும் துக்கத்தின் மத்தியில் புனித பூமியில் வசிப்பவர்களை இக்கிறிஸ்துமஸ் தருணத்தில், அப்படியே விட்டு விட விரும்பவில்லை. பிரார்த்தனையிலும் மற்றும் உறுதியான உதவிகளிலும் நாம் அவர்களுடன் துணை நிற்போம் என்று டுவிட்டர் செய்தியின் மூலம் தனது நெருக்கத்தை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.
ஒருவரின் தோலின் நிறம், சமூக அந்தஸ்து, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரும் நமக்கு அடுத்திருப்போரே என்பதை மனதில் கொண்டு வாழ்வோம் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை
மாறிவரும் அல்லது மாற்றப்பட்ட காலநிலை மற்றும் நிலங்களை பயன்படுத்தும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய வெப்பமண்டல பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு வளர்ந்து வரும் தண்ணீர் நெருக்கடி பற்றி விவாதிக்க உலக நாடுகள் கூடியது. காரணம் உலகளவில் நான்கு பேரில் ஒருவர் பாதுகாப்பான தண்ணீர் சேவைகள் அல்லது சுத்தமான குடிநீர் இல்லாமல் வாழ்கிறார்கள்