காசா பங்குதளத்திற்கு நிதி வழங்கிய உலக ஆயர் மாமன்றம்

காசாவின் கத்தோலிக்கப் பங்குதளத்தில் போரால் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென உரோம் நகரின் உலக ஆயர் மாமன்ற பிரதிநிதிகளிடமிருந்து திரட்டப்பட்ட நிதி 62,000 யூரோக்கள் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்தார், திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர், முனைவர் பவுலோ ரூஃபினி. ஏற்கனவே இந்த தொகை யெருசலேமில் உள்ள அப்போஸ்தலிக்க தூதரகம் வழி அனுப்பப்பட்டு, திருக்குடும்ப பங்குதள தலைமை அருள்பணி கபிரியேல் ரொமனெல்லி அவர்களை சென்றடைந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயர் மாமன்றக் கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்துகொண்ட தலைவர்கள், மதத்தை விட்டு ஒதுங்கி நிற்க முயலும் இன்றைய உலகில் கிறிஸ்தவ துவக்கத்தின் இன்றியமையாத நிலையை உணர்ந்து நாம் செயல்படவேண்டும் எனவும், நற்செய்திக்கு சான்றுகளாக விளங்க இளவயதிலேயே விசுவாச உருவாக்கல்கள் இடம்பெறவேண்டியதன் தேவையும், திருஅவையின் தலைமைத்துவ பணிகளில் பெண்களின் பங்கற்பு, புதிதாக திருமுழுக்குப் பெற்றோருடன் உடன் நடந்து சென்று அவர்களின் விசுவாசம் உறுதிப்பட உழைத்தல் போன்றவைகளை வலியுறுத்தியதாக பத்திரிகையாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
திருஅவையை பொருளாதார ரீதியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவில்லை என்பதை அறிந்துள்ளவேளையில், திருஅவையை நம் வாழ்வுக்குள் எடுத்து அதனை வாழும் முறைகளை சிறப்புற மாற்ற விழைகிறோம் என்பது குறித்தும் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Daily Program
