உலகின் ஒளி நானே| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 5ஆம் வாரம் –திங்கள்
தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62 யோவான் 8: 12-20
நாம் அளக்கும் அளவையால் நமக்கும் அளக்கப்படும்!
முதல் வாசகம் .
முதல் வாசகம் என்பது சூசன்னாவின் கதை. அவள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட ஓர் அழகான யூதப் பெண். அவளுடைய கணவர் யோவாக்கிம். இவர் யூத சமூகத்தில் மதிப்புக்குரியவர், செல்வந்தர். அக்கலத்தில் நடுவராக நியமிக்கப்பட்டிருந்த இரு முதியவர், யோவாக்கிம் தோட்டத்திற்கு வந்தபோது சூசன்னாவைப் பார்த்து அவள் மீது காமவேட்கை கொண்டனர்.
ஒருநாள் சூசன்னா தோட்டத்திற்கு வந்து குளிக்கச் சென்றாள். யாரும் இல்லாத நேரத்தில் இரு முதியவரும் அங்கு வந்து அவளைத் தங்களோடு படுக்குமாறு கட்டாயப்படுத்தினர். அவள் மறுத்து, ‘ ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்” என்றார். அவள் சத்தம் போடவே, இரு முதியவரும் அதிகமாகக் கூச்சலிட்டு, சூசன்னா மீது பழியைப் போட்டனர். மறு நாள் யோவாக்கிம் வீட்டில் விசாரனை நடந்தது. அப்போது, சூசன்னா தோட்டத்தில் இரு இளைஞர்களோடு படுத்திருந்ததாகவும், தங்களைக் கண்டதும் அவன் ஓடிவிட்டதாகவும் இரு முதியவரும் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டனர்.
அதை நம்பிய மக்கள், சூசன்னாவுக்கு மரண தண்டனை தீர்ப்பிட்டு, கொலை களத்தற்கு இழுத்துச் சென்றனர். ஆனால், சூசன்னாவோ கடவுளிடம் மன்றாடிக்கொண்டருந்தார். கடவுள் அக்கூட்டத்தில் இருந்த தானியேல் என்றவரைத் தூண்டிவிடவே, அவர் மக்களின் தீர்ப்பு தவறானது என்றும் மறுவிசாரனை வேண்டும் என்றும் கூறினார். தானியேல் இரு முதியவரையும் தனித்தனியே விசாரித்தார். ‘நீர் எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார். ஒருவர் “விளா மரத்தடியில்” என்றார். மற்றொருவர் “கருவாலி மரத்தடியில்” என்றார். அவர்கள் பொய்யர் என்ற மக்கள் அறிந்து கொண்டனர். மக்கள் சூசன்னாவுக்கு அளித்தத் தீர்ப்பை அவர்களுக்கே அளித்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார். என்றுரைக்கிறார். இதைக் கேட்டதும், பரிசேயர், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர்.
நற்சசெய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் என்றுரைத்தார். பரிசேயரைப் பொறுத்தவரை இயேசு உலகைச் சார்ந்தவராக உள்ளார். எனவே அவரது தீர்ப்பும் சான்றும் செல்லாது என்கின்றனர்.
அவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இயேசு, “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது என்று சாடுகிறார்.
அத்தோடு, உன்னைப்பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்” என்கிறார். ‘என்னை அனுப்பிய தந்தை’ என்று இயேசு கூறியதும் அவர்கள் கோபத்துடன், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டபோது, “உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது” என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
ஒருவருக்குத் தீர்ப்பளிப்பளிப்பது என்பது, எடுத்தோம் கவிழ்த்தோம் என சட்டென்று எடுக்கும் முடிவாக இருக்க இயலாது. பரிசேயர்கள் உட்பட நாம் அனைவரும் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கின்றோம். இதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய முதல் வாசகம். முதல் வாசகத்தில் இரண்டு முதியவர்களின் பொய்ச் சான்றைக் கேட்டு, அது உண்மையென நம்பி, இஸ்ரயேல் மக்கள் கூட்டம் சூசன்னாவிற்குச் சாவுத் தீர்ப்பிடுகின்றது. அப்போது அங்கு வரும் தானியேல் இரண்டு முதியவர்களையும் தனித்தனியாக விசாரித்து, அவர்கள் சூசன்னாவிற்கு எதிராகச் சொன்னதெல்லாம் பொய் என நிரூபித்து, அவர்கள் இருவரையும் மக்களின் கையில் ஒப்புவிக்கின்றார். மக்கள் அவர்களைக் கொன்று போடுகின்றார்கள்.
ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்த சூசன்னாவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு, மனிதர்கள் எப்படி உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. ஆண்டவர் இயேசுவுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தாலும் அவர் யாரையும் தீர்ப்பிடவில்லை. எனவே, நாம் யாரையும் தீர்ப்பிடாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.
ஆண்டவர் இயேசு, தீர்ப்பிடுதல் பற்றி உரைக்கையில். நீங்கள் உலகின் போக்கின்படி தீர்ப்பளிக்காதீர்கள் என்கிறார். உலகின் போக்கு என்பது சாத்தனின் விருப்பத்திற்கு உட்பட்டது. அங்கே உண்மை எடுபடாது. உலகப் போக்கின் படி தீர்ப்பளிப்பதில் உண்மை, நேர்மை, நீதி மறைக்கப்படும் அபாயம் உள்ளது. இயேசுவின் சீடர்களாகிய நாம் உலகைச் சாந்தவர்கள் அல்ல. ஆண்டவர் இயேசுவுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தாலும் அவர் யாரையும் தீர்ப்பிடவில்லை. எனவே, நாம் யாரையும் தீர்ப்பிடாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் மீது அநீதியாகக் குற்றப் பழி சாற்றுவது பெரும் குற்றம் என்பதை அறிந்துணர வேண்டும். நாம் பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாமலும், தீர்ப்பிடாமலும் இருந்து, எதுவாக இருந்தாலும் அதை ஆண்டவரின் அதிகாரத்திற்கு விட்டுவிடுதல் நன்று. அதிலும், நாம் தப்பித்துக்கொள்ள பிறர் மீது பழியைச் சுமத்தி தப்பிக்க முயல்வது ஒருபோதும் மனிதநேயம் ஆகாது. நாம் அளிக்கும் தீர்ப்பையே நாமும் பெறுவோம். நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையாலே நமக்கும் அளக்கப்படும்.
இறைவேண்டல்.
‘உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்காதீர்’ என்று அறிவுறுத்திய ஆண்டவரே, உமது அருளால், உமது அன்பையும் நீதியையும் பிரதிபலிக்கும் வாழ்க்கையை வாழ எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
