கடவுள் நம்மில் என்ன விரும்புகிறார்? இயேசு சொல்வதைக் கேட்டு, அவர் நம்மில் எதை எதிர்பார்கிறார் என்பதை அறிந்துணர நம் செவிகளைத் திறக்க வேண்டும் என்பதாகும்.
என் மீட்பர் வாழ்கின்றார்’ என்றும் இறுதியில் மண்மேல் எழுவார், தன்னை மீட்பார் என்றும் உறுதியோடு, தன் மீட்பர் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையை யோபு இழந்துவிடவில்லை. அவரது இறை அனுபவம் அவருக்கு மன வலிமையைத் தந்தது. இழித்துரைக்கும் நண்பர்களையும் மனைவயையும் அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
தொடர்ந்த்து நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கிறார். உடனே இயேசு, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தனது பாடுகளையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கின்றார்.
‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் (குழப்பம்) கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்’
1. வஞ்சனையும் பொய்யும் அவரை விட்டு அகலச் செய்ய வேண்டும்.
2. அவருக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; அவருக்கு தேவையான உணவை மட்டும் தந்தால் போதும் என்கிறார்.
நிறைவாக, ஓர் ஏழை உதவிக்குக் கூவி அ.ஐக்கும்போது, யார் ஒருவரு தமது காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் ஒருநேரத்தில் உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார் என்ற ஆழந்த போதனையும் இவ்வாசகத்தில் வலியுறுத்தப்படுகிறது.
மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.