கவலை எதற்கும் மருந்தாகாது. சிக்கலான சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினால் சிந்தனை தெளிவுப்பெறும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தன்னமில்லாத எண்ணத்தில் நற்செய்தியாளராக நம்மை நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! ” உரோ 12”2) என்று தான் பவுல் அடிகளும் அழைப்பு விடுக்கிறார்.
‘இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ (திப. 4:12) எனும் பவுல் அடிகளின் படிப்பினையின் உண்மையை அறிந்து வாழ்வோம்.
இயேசு எவ்வாறு, தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்பு செய்தாரோ, நாமும் இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வம் காட்டுவோம். நிலைவாழ்வு நமதாகும்.