சர்வதேச சிவப்பு பாண்டா தினம் | Veritastamil

சர்வதேச சிவப்பு பாண்டா தினம் - செப்டம்பர் 18

 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச சிவப்பு பாண்டா தினம் அனுசரிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் சிவப்பு பாண்டாக்கள் வாழ போராடி வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சிவப்பு பாண்டா தினம் இந்த அழகான இனங்கள் பற்றி அறியவும், அவற்றின் வாழ்விடத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 18ம் தேதியான இன்று சர்வதேச சிவப்பு பாண்டா தினம் கடைபிடிக்கப்படும்.

 

உலகம் முழுவதும் உள்ள சிவப்பு பாண்டாக்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை என்றாலும், IUCN பட்டியலின் படி சுமார் 10,000 சிவப்பு பாண்டாக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சிவப்பு பாண்டாக்கள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. 

 

சிவப்பு பாண்டாக்கள் ஃபயர்ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான மரங்களுக்கு இடையே காணப்படும் இவை இமயமலையையும், தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. மேலும் இது சிக்கிமின் மாநில விலங்காகும்.

 

சர்வதேச சிவப்பு பாண்டா தினத்தையொட்டி, இந்த அபிமான விலங்கைப் பற்றி அறியப்படாத சில உண்மை தகவல்களை இங்கு காண்போம்.,

 

1. சிவப்பு பாண்டாக்கள் கிழக்கு இமயமலை பகுதியில் அதிகமாக வாழ்கிறது. அங்கு தற்போதும் கூட சிவப்பு பாண்டக்கள் இருப்பதை நாம் காண முடியும். பாலூட்டிகள் வகையை சேர்ந்த இந்த சிவப்பு பாண்டாக்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை மரங்களின் மீது செலவிடுகின்றன. பெரும்பாலான இரவு நேரத்தை மரத்தில் தூங்கியே கழிக்கும் இந்த பாண்டாக்கள், அதிகாலை நேரத்தில் உணவை தேடி அலைகின்றன.

 

2. சிவப்பு பாண்டாக்கள் பெரும்பாலும் தனியாக வாழ விரும்பும் உயிரினங்கள் ஆகும். இந்த வகை பாண்டாக்கள் பெரும்பாலும் ஒன்றாக உணவு தேடுவதையோ, விளையாடுவதையோ விரும்புவதில்லை. இனச்சேர்க்கை பருவத்தில் ஒன்றுக்கொன்று தலை அல்லது வாலில் அடித்தல் அல்லது உடல் மொழி மூலம் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே ஒன்றாக இணைகின்றது.

 

3. சிவப்பு பாண்டாக்களுக்கு பனி மிகவும் பிடித்தமானது. உண்மையில், அவற்றின் சிவப்பு நிறத்திற்கும் பனிக்கும் மிகவும் பார்க்க அழகாக இருக்கும். குளிர்காலத்தில் பனி படர்ந்த பகுதிகளுக்கு இடையே சிவப்பு பாண்டாக்களை பார்ப்பது மிகவும் இனிமையாக இருக்கும். இந்த சிவப்பு பாண்டாக்களின் ஆயுட்காலம் வெறும் 23 ஆண்டுகள் மட்டுமே ஆகும். மேலும் பொதுவாக 12 வயதிற்குப் பிறகு இந்த பெண் சிவப்பு பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்யாது.

Daily Program

Livesteam thumbnail