வாக்குறுதியில் வாழ்வு உறுதி.. | Stella Ruby

அரங்கத்தில் உளவியல் நிபுணர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும் "இப்ப நாம் ஒரு புதிர் விளையாட்டு விளையாடப் போறோம்.. என்று கூறிவிட்டு யாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அழைத்து "இந்தக் கரும் பலகை யில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர்களின் பெயரை எழு துங்கள் இறை என்று பணித்தார். அந்தப் பெண்ணும் எழுதினார். பெயர்களைக் கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேரின் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்.

அந்தப் பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார். அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்கச் சொன்னார். அந்தப் பெண் தனது பக்கத்து வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார். இப்படியே அழித்து அழித்து, கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே அங்கே இருந்தன. அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன். இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்கச் சொன் னார். இப்போதுதான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர். வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் தனது பெற்றோர் பெயரை அழித்தார் அந்தப் பெண். மீண்டும் ஒரு பெயரை அழிக்கர் சொன்னார் அவர்.

அந்தப் பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் தனது மகனின் பெயரை அழித்து விட்டுக் கதறிவிட்டார். ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச் சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள் ” என்று கேட்டார். "உங்கள் பெற்றோர்தானே உங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கினர்? உங்கள் மகனால்தானே உங்களுக் குத் தாய்மை அந்தஸ்து கிடைத்தது? பின் ஏன் என்று கேட்டார்

முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தது. அதற்கு அந்தப் பெண்.... "இருக்கலாம். என் பெற்றோர் எனக்கு முன் னமே இறந்துவிட வாய்ப்புள்ளது. என் மகன் படிப் பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்துவிட நேரலாம்... ஆனால் எப்போதும் என்கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரைப் பாராட்டினர் இதுதானே . உண்மை

திருப்பலியில் திருமணத்தை நடத்திவைக்கும் போது “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக" என்று கூறுவதை நாம் அறிந்திருக் கிறோம். அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையை எப்போதும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தத் தவறாதீர்கள் அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்!

எழுத்து - சகோ. ஸ்டெல்லா ரூபி

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
stellaruby1950@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.