அம்மா என்றால் சும்மாவா! | Dhanaseeli

மே மாதம் என்றாலே கோடை விடுமுறையும் கொளுத்தும் வெயிலும் எல்லோருக்கும் ஞாபகம் வரும். குளிர்பானங்களும், குளிர்ச்சியான கனி வகை களும் ஆங்காங்கே கடைகளில் நமக்காகக் காத்திருக்கும். ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற சுற்றுலாத் தலங்கள் களைகட்டும். உறவினர்களின் வருகைக்காய் விடுமுறையில் பல வீடுகள் காத்திருக்கும். நட்பு வட்டம் உல்லாச உலகில் வலம் வந்து கொண்டிருக்கும். இவைகளையெல்லாம் கடந்த ஓர் உயர்ந்த, உன்னதமான நிலையே கிறிஸ்தவ மனங்களில் மேலோங்கி இருக்கும். ஆம் சாவையழித்த நிலையான வாழ்வுக்கு உயிர்த்தெழுந்த நம் தந்தைக் கடவுளின் மகன் கல்வாரி நாயகன் இயேசு மகதலா மரியாவுக்கும், மற்ற சீடர்களுக்கும் காட்சியளித்துக் கனிவுடன் உணவு சமைத்து, உண்டிட அழைத்தவர். அவர் பரம தந்தையின் இல்லம் செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருப்பவர், எம்மாவுஸ் சீடர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த அவர் நம்மோடும் உண்டு. உறவாடி, உலவி வருகிறார் என்ற விசுவாச நற்செய்தி நம் உள்ளங்களையெல்லாம் உவகை வெள்ளத்தில் நீந்தச் செய்யுமல்லவா "அல்லேலூயா!" ஆர்ப் பரிப்பை ஆலயங்கள் முழங்க, நாமும் உயிர்த் தெழுவோம். ஏறக்குறைய நாற்பது நாட்கள் இயேசு நம்மோடு இருக்கிறார். இருப்பார், நம்மோடு செயல்படுகிறார் என்பதை நாம் நம் விசுவாசக் கண் கொண்டு காண்போம்.

நம்மோடிருப்பவர். நம் மனநிலைகளை. நம் வாழ்வு நிலைகளை உற்று நோக்கிக் கொண்டி ருப்பார். நிச்சயம் தந்தையிடம் நமக்காய் பரிந்துரைப்பார். நமது கோரிக்கைகளையும் அவரிடம் சமர்ப்பிப்பார். பெரும்பாலும், நமது விண்ணப்பங்களெல்லாம் எதுவாக இருக்கும்? நலம் குன்றாத உடல்நிலை, நம்பிக்கையான உறவு நிலை, நல்லதொரு வேலைவாய்ப்பு. வளம் பெருகும் வாழ்க்கை முயற்சிகளில் வெற்றி, குலம் தளைக்கப் பிள்ளை குன்றாத பணிவாழ்வு, அர்ப்பணத்தில் ஆழம், மனம் நிறைந்த மகிழ்ச்சி, அதுக்கும் மேலே... இன்னும் இன்னும் என்று பல இருக்கலாம்.

கேட்பவை கிடைத்தால் மலரும் விசுவாசம் இல்லையென்றால் உலரும் விசுவாசம் என்றல்ல. உலகம் தராத அமைதியையும், சமாதானத்தையும் அவர் நமக்குத் தரக் காத்திருக்கிறார். அதை வேண்டிக் கேட்போம். இயேசுவைக் கண்டுணர்ந்த, தொட்டு ணர்ந்த சீடர்களை விட பல மடங்கு அதிகம் விசுவாசமும்., நம்பிக்கையும் கொண்டு இறை சித்தம் எதுவோ, அதனை ஏற்று வாழும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்போம். நமது திருமறை விசுவாசம் கலைந்து போகும் கனவாகவே கரைந்துபோகும். மணல் வீடாக அல்லாமல், அசையாதப் பாறைமீது கட்டப்பட்ட கட்டடமாக இருக்க விசுவாச உறுதி வேண்டுவோம். எம்மாவுஸ் இல்லம் சென்ற நம் இயேசு நம்மையும் தேடி வருகிறார். நம்புவோம். அவரின் அருட்கரம் நம்மில் செயல்பட நம்மைக் கையளிப்போம். நமது
நம்பிக்கைப் பூக்கள் உதிராமலிருக்க இறையன்பால் கட்டி வைப்போம். விசுவாசம் நம்மில் வேர்விட்டு வரை நமது விசுவாசம் இயேசுலே இணைந்து விழுது விட்டுப் படர இயேசு நம்மில் வாசம் செய்யும் போது நமக்கென்ன குறை நேரும்? உதை சார்ந்த அனைத்தும் இதயம் நிறைந்த இறையால் அருளப்படும் என்ற ஆழமான பற்றுறுதி நம் வாழ்வில் தொடரட்டும். இறைவன் தருவதில் நிறைவு காண் போம். நமது தேவைகள் எதுவென்று அறிந்த வரலைவா அவர்! தொடரும் உயிர்ப்பின் மகிழ்வும் அமைதியுமே தொலையாத செல்வங்கள் என்பதைப் பாஸ்கா நாட்களில் உள்ளத்திலிருத்துவோம்.

மே மாதம் உலகமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடும் மேரி மாதாவின் வணக்க மாதம் அல்லவா தேவாலயங்களிலெல்லாம். இம்மாதத்தில் செபமாலை ஒலி முழங்குமே! ஏறக்குறைய 12 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஸ்பெயின், ஜெர்மன் பிரான்ஸ் போன்ற நாடுகள் மே மாதத்தை அன்னை மரியின் வணக்க மாதமாகக் கொண்டாடி வருகின்றனர். இன்றும் திருச்சபை மரியன்னையை மகிமை செய்ய நம்மைத் துாண்டி வருகிறது. சிறுவர் சிறுமியரும், இளையோரும், முதியோரும் அக்கறையும், ஆர்வமும் கொள்வோம். மரியன்னையின் வழியாய் மாபரனின் அருளையும், ஆசிகளையும் பெற்றுக் கொள்ள முயல்வோம்.

உலகநாடுகள் இம்மாதத்தில் பல சிறப்புத் தினங்களைக் கொண்டாடி வருகின்றன. தொழிலாளர் தினம், தாதியர் தினம், அன்னையர் தினம், குடும்ப தினம் போன்றவை குறிப்பிடத்தக்கவை, மகளிர் தினம்(மார்ச்ச). பெண் குழந்தைகள் தினம் (செப் 8) என்று இரண்டு நாட்கள் பெண்களைச் சிறப்பிக்க இருந்த போதும், தாய்மையைக் கொண்டாட அதன் பெருமையை பூமிக்குச் சொல்ல, கண்கண்ட தெய்வமாய் தாயைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல மே மாதம் 13 ஆம் நாள் நமக்கு வாய்ப்புத் தருகிறது.

மண்ணில் வாழும் யாவரும் பெண்ணால் வந்தவர்கள் என்று எண்ணும்போது தாய்க்குலம் கொள்ளும் மகிழ்ச்சி அளவிடற்கரியதன்றோ ! நாமெல்லாம் பூமிக்கு வர, சாமி தந்த நம் அம்மாவிற்காய் நன்றி கூறுவோம். அவரது தன்னலமற்றத் தாயன்புக்கும், தியாகமிக்கச் செயல்பாடுகளுக்கும், தன் உதிரத்தைப் பாலாக்கி நம்மை உயிராக்கியதற்கும் தலைவணங்குவோம். அவரின் தன்மைக்கு ஈடு சொல்ல அகிலத்தில் எதுவுமில்லை. அம்மாவுக்கு இணை அம்மாவே தான்!

இன்று உழைக்கின்ற மனிதர்கள் (ரோபோக்கள்) கோடி கோடியாய் உருவாக்கப்படுகின்றன. ஆனால் உயிரோடும், குருதியோடும் உலவும் மனிதத்தை உருவாக்க இறையாற்றல் நிறைந்த அம்மாவால் மட்டுமே முடியும் என்பதை மறுக்க இயலுமா?

பெற்ற தாயைப் பெரிதும் போற்றிட பிள்ளைகள் முயல்வோம். அவளின் மனம் குளிர வாழ வைப்போம். மண்டியிட்டு ஆசி பெறுவோம். "அன்னையை நேசிப்போர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்” (சீராக் 3- 4)

குடும்ப தினம் 'குடும்பத்தின் புனிதம் காக்க மனிதம்' தழைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய குடும்பங்கள் பெரியதொரு சிக்கலான சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நுகர்வோர் கலாச்சாரம் துப்பாக்கிக் கலாச் சாரம், தற்கொலைக் கலாச்சாரம், பாலியல் வன் செயல்கள் மற்றும் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் மீடியாக்களின் தாக்கம், மென்பொருள் ஆதிக்கம் காசாக்கும் கல்வி, போராட்டங்களால் சாதிப்போம் என்ற உணர்வு, இத்தனைக்கும் நடுவே இறை நம்பிக்கையோடு, ஒழுக்கத்தோடு, மனிதப் பண்பு களோடு பிள்ளைகளை வளர்த்தெடுப்போம் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர் வாழ்ந்து கொண்டிருப்பது கண்கூடு

கத்தோலிக்கக் குடும்பங்களே. நமது திருச் சபையின் விசுவாச விளைநிலங்கள் என்பதனை நம் திருத்தந்தை வலியுறுத்தி, குடும்பத்தில் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார் பெற்றோரின் கடமை பிள்ளை வளர்ப்பில் மட்டுமல்ல பெற்றோர்தம் வாழ்க்கை நெறியில் கண்ணியமும் கட்டுப்பாடும் ஒளி மிகுந்ததாய் இருக்க வேண்டும் அவர்தம் சொல், செயல் யாவும் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருப்பது அவசியம் (சீராக் 7:1-17)

இன்று பிள்ளைகள் வீட்டுக்குள் இருக்கும் போதே விரல் நுனியில் பலவற்றைக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலை, அவர்களைக் கண்காணிப்பதும், முறை தவறியர் செயலியை இயக்கும் வேளை நெறிகாட்ட வும் பெற்றோர் முன்வர வேண்டும். உண்மை, நீதி தாமம், இயற்கையைப் பேணல், பிறருக்கு உதவுதல் போன்றவற்றில் பிள்ளைகளைப் பெற்றோர் பழக்குவது மட்டுமல்ல, அவர்களும் அத்தகையவர்களாகி வாழவேண்டும்.

பெற்றோரின் வாழ்தல் குறைபாடு பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதனைச் சொல்லா மலே வாழ்க்கை அனுபவத்தில் புரிந்து கொண்டி ருப்பீர்கள், நாம் பெரும்பாலும் நற்செய்தியில் காணும் மறைநுால் அறிஞர்களாக அல்லது பரிசேயர்க ளாகவே வாழ்ந்து பழகிவிட்டோம். அன்று இயேசு சுட்டிக்காட்டிய முரண்பாட்டுக் கூற்றாக இல்லாமல் உங்கள் பெற்றோர், பெரியோர் சொல்வதையும் செய்வதையும் பார்த்து நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள்" என்று பிள்ளைகளுக்குச் சொல்வதாக இருக்க வேண்டும்

விசுவாசத்தை நிலைநாட்ட வேண்டியதில் பெற்றோரே பெரும் பொறுப்புக் கொண்டுள்ளனர் துன்பம், கஷ்டம். விபத்து, ஆபத்து, மரணம், இழப்பு போன்றவை நேரிடும் போது விசுவாசம் அற்றவர் களாக இறைவனைச் சாடுதல் கூடாது. பெற்றோர் தங்கள் துன்பங்களை இறைவனிடம் திருவருள் ஏற்று, மகிழ்ச்சியாக இருந்தால் பிள்ளைகள் மனம் தானாக மகிழ்ந்திடுமே! செபம், வழிபாடு, ஆலயக் காரியங்களில் ஈடுபாடு காணிக்கை போன்றவற்றைச் செய்வதுடன், துணைக்கு குழந்தைகளையும் கூட்டிச் செல்தல் அவர்தம் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதை பெற்றோர்கள் கவனித்தல் வேண்டும்

விசுவாச வாரிசுகளை வளர்த்தெடுப்பதும், வாழ வைப்பதும் ஒரு சவாலான பணி என்றாலும் வலிமைப்படுத்துகின்ற இறைவனால் எல்லாம் ஆகும் என்பதை விசுவசிப்போம். வாழ்ந்து காட்டுவோம் வாழ வைப்போம். குழந்தைகள் மறைக்கல்வி வகுப் புக்குச் செல்லல், திருப்பலிக்கு உதவுதல், புனிதர்கள் வரலாறு அறிதல் போன்றவற்றோடு, அறிவு. ஒழுக்கம் சார்ந்த கல்வியையும் அறவழியில் கற்றுணர முன்வர வேண்டும், நண்பர்களைத் தேர்ந்து கொள் வதில் மிகுந்த விழிப்புணர்வு தேவை. நாளைய சமுதாயம் மட்டுமல்ல. இன்றைய சமுதாயமும் இளையோரின் செயல்பாடுகளை நம்பியுள்ளதால் குழந்தைகள் வளரும்போதே நற்பண்புகளை பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்வது சாலச்சிறந்தது

ஆசிரியப் பெருமக்கள் தான் பெற்றோருக்கு அடுத்தபடியாகக் குழந்தைகளை, இளையோரை நன்னெறிக்கு இட்டுச் செல்பவர்கள். அவர்கள் யாதொரு குறைபாடுமின்றி வாழ்தல் அவசியம் மட்டுமல்ல. காலத்தின் கட்டாயமும்கூட. கல்விக் கூடங்களையும், வகுப்பறைகளையும் கொலைக் களங்களாக மாற்றாத மனிதர்களை உருவாக்குங் கள். உடல் கவர்ச்சியோ. உடனிருப்போ காதலல்ல என்பதனைப் புரிந்து கொள்ள வழிகாட்டுங்கள். குடும்ப தினம், வெறும் நாளேட்டுத் தினமாக இல்லாமல், நாட்டையும், திருச்சபையையும் காக்கும் நல்ல உள்ளங்கள் உருவாகும் தினமாகட்டும். எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுள்ளதாக்க எல்லோ ருக்கும் பொறுப்புண்டு, வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் பெற்றோரே

சிந்தனைக்கு சீராக்கின் சில வார்த்தைகள்

உனக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நற்பயிற்சி அளி. இளமை முதலே பணிந்திருக்கச் செய் (சீராக் 7:23)

நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பிள்ளை களின் பிள்ளைகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும், கட்டளைகளை யும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைபிடிப்பீர் களாக. இதனால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள் (இச 6:2.4.6.7).

குழந்தைகளே, சொல்லாலும், செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள் அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும் (சிராக் 3:8).

தந்தை மதிக்கப் பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை. தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை (சீராக் 3:11),

பெற்றோர் பால் கடமை எனும் சீராக்கின் 3 ஆம் பிரிவு இன்றும், என்றும் பொருத்தமான அறிவுரையே, வாசிப்போம். வாழ்வோம்!

எழுத்து - சகோ. தனசீலி

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.