பிறரிலே இறைவனைக்கான
"எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்" - நீதிமொழிகள் 8:17. இயேசு எல்லாவற்றிற்கும் மேலாக அவரையும்,நம்மை நாமே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய அழைக்கின்றார். இறைவன் வாழும் ஆலயமான மனிதரை அன்பு செய்யாமல், பேராலயங்களில் இயேசுவை தேடி பயனில்லை.
நம்முடைய தூய்மையில் எவ்வளவு குறை இருந்தாலும், இரைவன் தனது மீட்பின் திட்டத்தில் நம்மை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை; காரணம் 'அன்பு' . அந்த இறையன்பிற்கு தகுதியுள்ள முறையில் வாழ நம் வாழ்க்கை நெறிகளை நாம் சீர்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.
ஜெபம்: அன்பின் இறைவா பிறரிலே உம்மை காண, பிறர் அன்பு பணிகளினால் உம்மை வெளிப்படுத்த இந்த அதிகாலை வேளையில் எம்மை நிறைவாய் ஆசீர்வதியும். புனித மரிய மகதலேனாலே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.