தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 14

1. முதல் மின்சார விளக்கு மின்சார விளக்கைக் கண்டு பிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். 1880இல் ஜனவரி 1இல் புத்தாண்டு தினத்தில் நியூயார்க் நகரில் 800 மின்சார விளக்கை எரியவிட்டு உலகையே வியக்க வைத்தார் எடிசன்.

2. சிங்கப்பூர் ஆட்சிமொழி சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம்,சீனம், மற்றும் மலாய் ஆகிய 4 மொழிகள் ஆட்சி மொழியாகும்.

3. 'A'ஒன் முதல் தரமானவற்றை ஏ-ஒன் (A.1) என்கிறோம். இது எப்படி நடைமுறைக்கு வந்தது தெரியுமா? பழங்காலத்தில் முதல் தரமான கப்பல்களை A.1.எனக் குறியிட்டு லாயிட்ஸ் பதிவேட்டில் எழுதுவது வழக்கம். அதில் இருந்தே முதல்தரமானவற்றை A1 என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.

4. பின்கோட் பின்கோட் எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண் இந்தியாவில் 15-8-1972ல் அறிமுகம் செய்யப்பட்டது.

5. முதலைக் கண்ணீர் முதலையின் கண்ணில் இருந்து சில சமயம் நீர் வடியும். இதனை அழுகை - கண்ணீர் என நினைக் கிறோம். அது சரியல்ல. முதலை உணவை அப்படியே விழுங்கும். அதனை செரிக்க வைக்க வயிற்றில் ஒரு திரவம் சுரக்கும். அப்படி சுரக்கும் நீர் சற்று அதிகமாகி விட்டால், அந்த அதிகப்படி நீர்தான் கண்வழியே வெளியேறும்.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.