சர்வதேச செய்தித்தாள் கொடுப்பவர் தினம் - அக்டோபர் 08

சர்வதேச செய்தித்தாள் கொடுப்பவர் தினம்

செய்தித்தாள்கள் இருக்கும் வரை பேப்பர்பாய்களை கொண்டாட  அக்டோபர் 8 -ம் தேதி தேசிய செய்தித்தாள் கொடுப்பவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மழை பெய்தாலும், வெயிலாக இருந்தாலும், பேரிடரக இருந்தாலும் எந்த அச்சமில்லாத இவ்ரகள்  தினமும் காலையிலும்மாலையிலும் செய்திகளை நம்மிடம்  கொண்டு சேர்க்கிறார்கள்.

 

இந்நாள் அமெரிக்காவில் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தால் பணியமர்த்தப்பட்ட முதல் செய்தித்தாள் கொடுக்கும் பையனான 10 வயது Blarney Flahertyயை கவுரவிக்கிறது. 1833  ம் ஆண்டில், "தி சன்" ல்  "நிலையான மனிதர்கள்" விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தார், இளம் ஃப்ளாஹெர்டி. பெஞ்சமின் டே ஃப்ளாஹெர்டியை  அங்கீகரித்து பணியமர்த்தினார், அதன் விளைவாக   "செய்தித்தாள்கள்! உங்கள் செய்தித்தாள்கள்களை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள்!" என்ற குறள் நியூயார்க்கின் தெருக்களில் ஒலிக்கத்தொடங்கியது, எண்ணற்ற செய்தித்தாள் கொடுப்பவர்கள்  Paper  Boys  அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றினர். இவர்களை சிறப்புவிக்க 185 ஆண்டுகளுக்குப் பிறகு, செய்தித்தாள் கொடுப்பவர் தினம் இவர்கள் அனைவரையும் கௌரவிக்கிறது.