மனிதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.07.2024

விழுந்தால் தூக்கி விட யாருமில்லை என்பதை உணர்ந்தவன், தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்துத் தான் வைப்பான்.

நாம் இந்த உலகத்தில் தங்கிச் செல்வதற்கான வாடகை மற்றவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே.

தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே.
நீ  இறந்தபிறகு உன் இறுதி சடங்கில் 
தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான்.
தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான்.

யோசித்து பார் புரியும்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு.
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை.

ஆகையால் மனிதனை மனிதனாய் மதித்தால் வெற்றி நிச்சயம்.

இதை எல்லாம் செய்ய பெரிய அளவில் பணமோ செல்வாக்கோ அவசியமில்லை என்பது மிகப் பெரிய உண்மை!

ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் பொறுமையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி