மாற்றம் அவசரம்

#switchtoclothbags         

இந்த ஒரு பதிவு இன்று மிகவும் பேசப்பட காரணம் என்ன?  
பிளாஸ்டிக் உலகத்தில் சுழன்றுகொண்டிருக்கும் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு விழிப்புணர்வே இந்த வீடியோ பதிவு.
மனித உயிர்கள் மட்டுமின்றி விலங்கினங்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பைகள்.
முதலில், யானையைப் பற்றி பார்த்தால், பிளாஸ்டிக் சாப்பிடுவதால் அதற்கு வயிற்று உபாதைகளோடு சேர்ந்து அதன் நரம்பு மண்டலங்களும் பாதிக்கப்படுகின்றன.
 மாடுகளை பொறுத்தமட்டில், தமிழர்களுக்கு ஒரு மரியாதைக்குரிய விலங்காக காணப்படுகின்றது. ஆனால் அதுவும் நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளினால் உயிர்களை இழக்கின்றன.
ஆமை, கடல் வாழ் உயிரினங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. பிளாஸ்டிக் பைகள் கடலில் இருப்பதால், அதனால் நீந்த முடியாத ஒரு சூழல் ஏற்படுகின்றது.
பறவைகள் சுவாசிப்பதற்கு பிளாஸ்டிக் பைகள் ஒரு தடையாக இருக்கின்றன.

இதுவே தகுந்த காலம். இன்றிலிருந்தே ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்வோம்.
துணிப் பைகளை உபயோகப்படுத்த பழகிக்கொள்வோம்.  #switchtoclothbags #saynotoplasticbags

Images courtesy: Twitter and Medwet.org