இயற்கையில் உறைவோம், இறையை மாட்சிப்படுத்துவோம்


pixabay

கிரேக்க நாட்டில் அமைந்துள்ள அதோஸ் மலையில் இயற்கையை நேசியுங்கள் (Love Trees) என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு செல்பவர்கள் இயற்கையில் உறைந்திருக்கும் இறைவனை சுவாசிப்பது உறுதி. அங்கு சென்ற துறவி ஒருவர் இவ்வார்த்தைகள் விவிலியத்தில் எழுதப்படாத கடவுள் கட்டளை என்கிறார்.

கடவுள் அனைத்தையும் படைத்தார், படைத்தவை அனைத்தையும் நல்லவை எனக் கண்டார் (தொட 1). ஆனால் மனிதன் இயற்கையில் கடவுளைக் காண முடியாமல் போனதற்கு காரணம் அவனுடைய சுயநலம். ஏதேன் தோட்டத்தில் எப்பொழுது ஆதாம் ஏவாளிடம் சுயநலம் தாண்டவம் ஆடியதோ அப்பொழுதே அவன் இயற்கையில் அசைவாடிக்கொண்டிருந்த இறைவனை காண இயலாமல், தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டான்;. ஆக இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

நோவா பெரும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படும்போது அவனோடு படைப்புகளின் அனைத்திலும் ஒரு ஜோடியை எடுத்துக்கொள்ளக் கடவுள் கட்டளையிடுகின்றார் (தொட 9:12-17). பெரும் வெள்ளத்திலிருந்து நோவா காப்பாற்றப்பட்டபோது தீய மனிதர்கள் அழிந்தார்கள் ஆனால் இயற்கை அழியவில்லை. எனவேதான் ஒரு பறவைதான் வெள்ளத்தின் நிலையை நோவாவுக்கு அறிவுறுத்தியது அதுவும் பசுமையான மரத்தின் இலை வழியாகத்தான் உணர்த்தப்பட்டது. ஆக அந்த பெரும் வெள்ளம் இயற்கைக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தவில்லை.

கடவுள் இஸ்ரேயல் மக்களை மீட்க வெட்டுக்கிளி, கல்மழை, கொசுக்கள், தவளைகள், ஈக்கள் போன்றவற்றை பயன்படுத்துவதையும் (விப 7-10); அவர்கள் கானான் நாட்டினை நோக்கிப் பயணிக்கின்றபோது கடவுள் கொடுத்த நகர்களை முற்றுகையிடும்போது ‘நகரை முற்றுகையிடும்போது மரத்தைக் கோடாறியால் அழிக்காதே’ (இச 20:19) என்னும் கட்டளை கொடுக்கின்றார். இறைவாக்கினர் எலியாவிற்கு காகத்தின் வழியாக கெரீத்து ஓடையருகில் உணவுகொடுத்தார், எலியா தன் உயிர் தப்பி ஓரேபு மலைக்கு செல்லும்போது இயற்கையின் பாதுகாப்பில் வழிநடத்தினார். 
ஆக கடவுள் அனைத்தையும் அதன் தனித்தன்மையோடு படைத்திருக்கின்றார். எனவேதான் இவ்வுலகில் நாம் காணும் எந்த ஒரு பொருளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை - ஒரு மரத்தில் வளர்;ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இலைகளில் ஒன்றுகூட மற்றொன்றைபோன்று இல்லை. 

அப்படியென்றால் நாம் பள்ளியில் படித்ததுபோல ஓர் உணவுச் சங்கிலி தொடரில் படைப்புகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றொன்றின்மீது அதிக்கம் செலுத்தும்போது அந்த உணச்சங்கிலியில் மாற்றம் நிகழ்கின்றது, வாழ்வு பாழ்படுகின்றது,  இயற்கை இறைவனின் இல்லிடமாக தோற்றமளிப்பதில்லை. 

எனவேதான் ஒவ்வொரு உயிரும் உலக நலவாழ்வுக்கு முக்கியம், உணவுச் சங்கிலியின் இன்றியமையாத அங்கம் என்பதனை உணர்த்த இந்த ஆண்டானது உலக உயிர் பன்முகத்தன்மை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பன்முகத்தன்மையைக் காத்தலில் 192 நாடுகள் கையப்பமிட்டிருக்கின்றன. எனவே உயிர் பன்முகத்தன்மையை காத்தலில்தான் நாம் வாழ்வு பெறமுடியும்.

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த அடைக்கலான் குருவியும், பூவரசு மரத்தின் பூவிலிருந்து வருகின்ற தேனும், தேன் சீட்டுக்குருவிகளும், மணல் புழுக்களும், கடல் ஆமைகளும், தவளைகளையும் இன்று அதிகம் காணவில்லை. 

எனவேதான் இயற்கை சூழலில் மாற்றங்கள் நிகழ்கின்றன, நம் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்கின்றோம். காரணம் கடலில் எண்ணை கலத்தலும், நிலத்தில்; மனிதனின் செயற்கை உரங்களையும், விதைகளையும் பயன்படுத்தலும், இயற்கையை மாசுபடுத்தலும், காடுகளை அழித்தலும் மனித வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கி;ன்றன. இதன் அடிப்படைக் காரணம் மனிதனின் பேராசை.

நாம் சுயநலம் தவிர்த்து, குறுக்கு வழியில் அதிக வசதிகளையும் சுகங்களையும் அனுபவிக்க முயலும்போது இயற்கைக்கு இத்தணை இடையூறுகளையும், உணவுச் சங்கிலியில் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றோம். இயற்கையில் உறைந்திருக்கும் இறைவனின் குரலை கேட்கமுடியாமல் தவிக்கின்றோம். கடைசியில் இயற்கை மாற்றத்திற்கு இறைவனையே காரணம் காட்டுகின்றோம். இயற்கையோடு இயந்து இறைவனில் உறைய முயலுவோம்.
 

Comments

மிகவும் அறுமை நன்றி

Add new comment

1 + 0 =