குடியரசு தந்த பிளேட்டோ

சாக்ரட்டீசுக்கு அடுத்தபடியாக, கிரேக்கம் தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளேட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவர். இவரது காலம் கி.மு. 427-347

சாக்ரட்டீசின் தத்துவத்தில் மயங்கி பல மாணவர்கள் அவரின் சீடராய் இருந்தனர். அவர்கூடவே நிழல் போல தொடர்ந்தனர். இவர்களில் முதன்மையானவர் பிளேட்டோ. சாக்ரட்டீஸ் மீது அன்பும், மதிப்பும், பற்றும் மரியாதையும் மிக்கவர். சாக்ரட்டீஸ் மரண தண்டனையின்போது, அவரை எப்படியும் தப்புவிக்க முயன்றவர். முடியாதபோது மனம் வருந்தியவர்.

சாக்ரட்டீஸ் மறைவுக்குப் பின்பு, அவரது நல்ல நல்ல கருத்துக்களைப் பரப்பினார்.

இவர் பிறந்ததும் ஏதென்ஸ் நகரமே. அப்போது ஏதென்ஸ் நகரத்தில் கட்டாய ராணுவ சட்டம் இருந்தது.

அதன்படி பிளேட்டோ சிலகாலம் ஏதென்ஸ் ராணுவத்தில் பணி செய்தார். பிலிப்பளேசியன் யுத்தத்தில் (430-404) கலந்துகொண்டவர். தனது இருபதாம் வயதில் ராணுவத்தில் இருந்து திரும்பி சாக்ரட்டீசிடம் கல்வி பயின்றார். சுமார் எட்டு ஆண்டுகள் அவரிடம் சீடராக இருந்து கல்வி பயின்றார். சாக்ரட்டீஸ் இறந்தபோது பிளேட்டோவிற்கு இருபத்தெட்டே வயது.

மாசிடோனியா, எகிப்து, லிபியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு பிளேட்டோ பயணம் செய்தார். நிறைய மனிதர்களைச் சந்தித்தார். அனுபவமும் அறிவும் பெற்றார். செல்கிற இடத்தில் தனது கருத்தையும் சாக்ரட்டீஸ் கருத்தையும் பரப்பினார்.

பிறகு மீண்டும் தாய்நாடான ஏதென்ஸ் திரும்பினார். ஏதென்ஸ் நகரில் ஒரு கல்விக்கூடத்தை அமைத்தார். அதில் தேர்வு செய்யப்பட்ட ஒருசில மாணவர்களுக்கு கல்வி அளித்தார்.

அப்படி பிளேட்டோவின் ஏதென்ஸ் நகரத்து அகாடமியில் கல்வி பயின்ற மாணவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாணவரே அரிஸ்டாட்டில் என்பார்.

பிளேட்டோ எழுதிய உலகப்புகழ்பெற்ற ஒரு நூல் குடியரசு (The Republic) என்பதாகும். இது மிகச்சிறந்த உலக நூல்களில் ஒன்று என இன்றளவும் போற்றப் படுகிறது. ஒரு நாடு, அதன் ஆட்சியாளர், மக்கள் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது இந்நூல். குடியரசை ஆதரித்தவர் இவர். நாட்டை அறிவார்ந்தவர். ஆள வேண்டும் என்பது இவர் தத்துவம்.

இவர் பெண்களின் உரிமையை கி.மு. காலத்தி லேயே வலியுறுத்தினார். சமூக வாழ்விலும், அரசிலும் பெண்களுக்குச் சம அந்தஸ்து உண்டு என்றவர். இந்த இருபதாம் நூற்றாண்டில் இன்னும் 33 சதவிகிதம் என்பதே கனவாக இருக்கும் வேளையில் 2500 ஆண்டு களுக்கு முன்பு அரசிலும் சமவாய்ப்பு என்ற கொள்கை எத்தனை உயர்வானது என நாம் அறியலாம். இந்த வகையில் இவர் தத்துவஞானி என்பதோடு, சமுதாய சீர்திருத்தவாதி (social reformer) என்றும் இவரைக் கொள்ளலாம்.

இவரது முக்கிய சில தத்துவ முத்துக்களை நாம் இனி காணலாம்.

''அறிவு, வீரம், நிதானம், நேர்மை ஆகிய நான்கும் நல்ல ஒழுக்கங்கள்.'

ஒழுக்கம் என்பதற்கு இவர்தரும் இனிய விளக்கம் இது. அடிப்படையாக நான்கு பண்புகளை இங்கே குறிப்பிடுகிறார். முதன்மையானது அறிவு. அடுத்து தேவை வீரம். பிறகு எதிலும் நிதானம். அதோடு நேர்மை. இந்த நான்கிலும் மற்ற எல்லா உயர்குணமும் ஐக்கியமாகிவிடும். அதனால் இப்படி ஓர் கருத்தை இவர் தருகிறார்.

எல்லா போதனையிலும் 'அறிவு' என்பதை இவர் முதன்மைப்படுத்துவார்.

"மனிதனிடம் அறிவு உறங்கினால், கீழான இச்சைகள் கண்விழித்து எழுந்து குதியாட்டம் போடும்' என்பது இவர் கருத்து. ஆம் எல்லாத் தீமைக்கும் அறிவின்மை அடிப்படையன்றோ?)

அறிவுக்கு அடுத்தபடியாக நீதியின் முக்கியம் குறித்தும் இவர் பேசுகிறார்.

நீதி என்பது மனிதனுக்குரிய பண்பு' என்பது இவர் விளக்கம். விலங்கிடம் சுயநலம் இருக்கும். அது அதன் தேவையை மட்டுமே அறியும். ஆனால் மனிதன் எதிலும் நீதியை அறிய வேண்டும். எனவேதான் நீதி ட்டோ என்பது மனிதப் பண்பு என்பார் பிளேட்டு.

ஆசைகள் உலகின் துயருக்குக் காரணம் என்பது ஓர் அடிப்படை நீதி. நபிகள், இயேசு, புத்தர் போன்ற மகான்கள் இதனை வலியுறுத்த நாம் காணலாம். தத்துவ ஞானியான பிளேட்டோ இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

"ஆசைகள் வளர வளர தேவைகளும் வளர்ந்து கொண்டேயிருக்கும்' என்பது இவரின் யதார்த்தம். மனதில் திருப்தி எழும்போது தேவை குறைகிறது. குற்றமும் குறைகிறது. திருப்தியும் சேர்கிறது. ஆசை பெருக பெருக தேவை அதிகமாகிறது. வாழ்வு தடம் மாறும். குற்றம் சேரும். துயரும் சேரும். இப்படியான பல நடைமுறை வாழ்வியலுக்கு ஏற்ற எத்தனையோ கருத்துக்களை இவர் உலகுக்குத் தந்தார்.

பல நாடுகளுக்குப் பயணித்த பிளேட்டோ, அங்கே தங்காது, ஏதென்ஸ் திரும்பினார்.

தன் தாய்நாடு, தன் நாட்டு மக்கள் என பாசம் கொண்டார். அந்த நாட்டுப்பற்று அவசியம் என்பது இவர் கருத்து.

'நாட்டுப்பற்றை விட நெருக்கமான அன்பு வேறில்லை" என்பார் இவர். இதனை 'அன்பு' என்றே குறிப்பிடுவார்.

அறிவுசார் உலகத்திற்கு பிளேட்டோவின் சிந்தனை ஓர் மாபெரும் மாற்றம் தந்தது எனலாம். ' சுகமும் துக்கமும்தான் குழந்தைகளின் முதலாவது

புலனாய்வு' என்று குழந்தைகள் பற்றியும் தனது கருத்தை விளக்குவார், கல்வி பற்றிய கருத்திலி "பிறவித்திறமையை வளர்ப்பதற்காகவே கல்வித் திறமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார் இவர்.

எண்ணம் முக்கியம் என்ற இவர் "எண்ணமே செய்கைக்கு அடிப்படை" என்று கூறுவார். இவர் கருத்துக்கள் வாழ்வை மிக வளப்படுத்துவன எனலாம்.