அன்புக்கு எல்லை இல்லை | Rosammal
மானுடம் இருப்பதும், இயங்குவதும் அன்பாலே. அன்பு என்னும் ஆணிவேர் ஆழப்படும் போதுதான் பலன் கொடுக்கமுடியும். அன்பு என்னும் அடித்தளம் உறுதி யாய் இருந்தால்தான் அண்டி வருவோரை அர வணைத்துக் காக்கும். உயர்ந்த உள்ளம் உடையவர் களாக, தனக்கும், பிறருக்கும் உதவுபவர்களாக வாழ முடியும். “அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்கேற்ப நினிவே மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்ததாக இருந்தாலும் கடவுள் இரக்கம் உடையவராக யோனாவை மக்கள் மனம் மாற அங்கு அனுப்புவதற்கு உறுதியளிக்கிறார்.
நல்லார் ஒருவர் உள்ளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை" என்பது போல் உலகில் வாழும் மக்களுக்குச் சேவை செய்வதே மிகப்பெரிய சேவை. அதுவே இன்றைய தேவை என்பதை அறிந்திருந்தும், எதிர் மறையாக தர்சீசுக்கு தப்பியோட எண்ணினார், தர்சீசுக்கு செல்லும் கப்பலில் ஏறி பயணம் மேற்கொண்டார். “பாதாளத்திற்குச் சென்று பதுங்கினா லும் அங்கேயும் நீர் இருக்கிறீர்” என்பதுபோல் இறை வனின் கரத்திலிருந்து தப்பியோட முடியுமா? முடியாது கடும்புயலின் சீற்றத்தால் பயணம் செய்தவர்கள் சீட்டுக் குலுக்கி யார் பெயர் வருகிறதோ அவர்களை கடலில் வீச முடிவு செய்தனர். யோனாவின் முடிவு வேறு. கடவுளின் திட்டம் வேறு. யோனா கடலில் வீசப்பட்டு ஒரு பெரிய மீனுக்கு இரையானார். மூன்றாவது நாள் மீனின் வாயிலிருந்து கரைக்கு விடுவிக்கப்பட்டார்.
இரண்டாவது முறையாக கடவுள் யோனாவிற்கு தோன்றி நீ நினிவே மாநகர் சென்று இன்னும் மூன்று நாட்களில் நினிவே அழியப்போகிறது எனக்கூறு என்றார். அரசன் முதல் மக்கள், மாக்கள் அனைவரும் அழிவினினின்று விடுதலை பெற ஒரு மனதாய் நோன் பிருந்து மன்றாடினார்கள். கடவுள் மனமிரங்கி, அனுப்பு மாறு கூறிய தண்டனையை அனுப்பவில்லை. இது யோனாவிற்கு கடும் கோபமாக இருந்தது. “இதற்காகவா நீர் என்னை இம்மக்களிடம் அனுப்பினீர். நீர் இரக்க முள்ளவர். கனிவுள்ளவர், பொறுமையுள்ளவர் என்பது முன்பே எனக்குத் தெரியும். வாழ்வதைவிட சாவதே மேல்" என்று கூறி ஊருக்கு வெளியேச் சென்று அமர்ந்திருந்தார்.
கடவுள் நிழல் தரும் ஆமணக்குச் செடியை தோன்றச் செய்து யோனாவிற்கு நிழல் கொடுத்தார். பிறருக்காக வாழ்வதே வாழ்வு. கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை, எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார். பொல்லார் என வேற்றுமை பாராட்டுவதும் இல்லை. மனம் மாறும் அனைவருக்கும் மன்னிப்பு அளிப்பவர், அடித்தலை விட அரவணைப்பதே கடவுளின் இயல்பாகும். என்னே இறைவனின் அன்பு மலரட்டும் நம் உள்ளத்திலும்! விவிலியத்தை கையில் எடுத்து முழுவதும் படியுங்கள் யோனா 1 முதல் 4 வரை.
எழுத்து - சகோ. ரோசம்மாள்
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.