கடவுள் ஜோசியக்காரரா! பதில் வேண்டுமா? | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 8 | Fr. Rojar | VeritasTamil

 இன்னக்கி நா புதுசா ஒன்னும் எழுதப்போறதில்லீங்க. ஆனா, ஏழு நாளும் நான் “சுத்தி சுத்தி” எழுதுனத ‘சுருக்கமா’  சொல்லப் போறேன். அவ்வளவு தான்... இந்த ஏழு நாளும், நான் சொல்ல வந்தது இதுதாங்க.

                 “கடவுளுக்கே” அடுத்த நிமிசம், என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாது. ஆனா, கடவுளால நாளைக்கு என்ன நடக்கும்னு, “கணிக்க” முடியும். எப்படின்னா, நாம ‘மனசுல’ நினைக்கிறத, அறியிற சக்தி, கடவுளோட பலம். ஆனா, ‘நடக்கும்னு’ உறுதியா தெரியாது. ஏன்னா, ‘செய்யனும்’ அல்லது ‘செய்யக்கூடாது’ங்கிறது, மனுசனோடு சுதந்திரம். கடவுள் எந்த ‘கணக்கும்’ ‘மனுசங்களுக்கு’ எழுதல. நம்ம ‘தலை எழுத்த’ நிர்ணயிக்கிறது ‘நாம’ தான்......அம்புட்டு தான்!!!

                       இத உங்களால ஏத்துக்க முடியாதுன்னு தெரியும்? ஏன்னா, கடவுளுக்கு ‘முக்காலமும்’ தெரியும், ‘அவரோட சக்திக்கு’ ஈடு இணையே கிடையாது – அப்படிங்கிறது உங்க வாதம். அதனால, நான் சொல்றத ‘நம்ப மாட்டேன்’ன்னு, சொல்வீங்க. சரி, நீங்க சொல்ற “வாதத்த” தான, 2000 வருசமா சொல்லிகிட்டு இருக்கீங்க. ஒங்க ‘கேள்விக்கு’ பதில் கிடைச்சிருக்கா? இல்லையே?  

                        சரி, உங்க “வாதத்துக்கே” வார்றேன். கடவுளுக்கு நீங்க சொல்ற மாதிரி, “நாளைக்கு” நடக்குறது, “எதிர்காலத்துல” நடக்குறது தெரியும்னா, நான் கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க!!! பிரச்சனைய இன்னைக்கே முடிச்சுருவோம். நாளையில இருந்து நா எழுதல..... டீல் எனக்கு டபுள் ஓகே!!!

  • கடவுளுக்கு ‘பியூச்சர்’ தெரியும்னா, எனக்கு வர்ற எல்லா கஷ்டமும் தெரியும்னா ஏன் காப்பாத்தல? கஷ்டத்த பாத்து சிரிக்க அவரு ‘ஸடிஸ்டா’?
  • ‘கொரோனாவ’ கடவுள் ஏன் ‘Allow’ பண்ணுனாரு? சுனாமி நேரத்துல ‘அப்பாவி’ங்க தான செத்தாங்க? இயற்கைய வித்துப் பொழைக்கிறவன் நல்லாத்தான
  • ‘குடும்பத்தோட’ கும்மாளம் போட்டுகிட்டு இருந்தான்?
  • தப்பு செய்யுறவன கடவுள், முதல்லேயே தடுத்து நிறுத்துனா, அப்பாவிய காப்பாத்தியிருக்காமே? செய்யாத தப்புக்கு அவனுக்கு ஏன் தண்டன?
  • ஸ்டொ்லைட்ல ‘ஸ்னோலின’ ஏன் காப்பாத்தல? அவருக்குத்தான் சக்தி இருக்குதே? அவருக்குத்தான் நடக்கப் போறது தெரிஞ்சிருக்குமே?
  • எல்லாமே ‘விதிப்படி’ தான் நடக்கும்னா, நாம அம்புட்டு பேரையும் “கொல” பண்ணிட்டு, பால் வடிய முகத்த வச்சிகிட்டு, “கடவுள் எனக்கு விதியா எழுதி வச்சுட்டான்னு” சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாமே???
  •  நான் ‘கஷ்டப்படனும்னு எனக்கு ‘தலவிதிய’ எழுதுற ‘சக்திக்கு’ பேரு, ‘கடவுளா?’ ‘சாத்தானா?’
  • நல்லவங்க ‘நல்லது’ செஞ்சதுக்காக, செத்துருக்காங்க! அலக்கழிக்கப்படுறாங்க, ‘அட்லீஸ்ட்’ அவுங்களயாவது “உங்க” முக்காலமும் தெரிஞ்சவரு, காப்பாத்தியிருக்கலாமே? (ஒருவேள ‘கண்’ தெரியாம கஷ்டப்படுறாரோ?)

                        உங்களால பதில் சொல்ல முடியும்???? எவனாலயும் சொல்ல முடியாதுங்க! ஆனா, “மழுப்ப” முடியும். அப்படித்தான?  இப்ப, நான் சொன்னத வச்சு, யோசிச்சு பாருங்க! இத வச்சு, இதுல இருக்குற அத்தன கேள்விகளுக்கும், என்னால ‘ஸ்ட்ராங்கா’ பதில் சொல்ல முடியும். எப்புடீடீடீடீடீடீடீ?ஏத்துக்கிறீங்களா?

                           நான் உங்கள “நம்ப” சொல்லல. ஆனா, இத ‘நம்புனா’ எப்படி இருக்கும்?னு, ஒரு ‘ட்ரையல்’ பாக்கச் சொல்றேன். அவ்வளவு தான். கொஞ்சம் “மாத்தி சிந்திச்சு பாக்கச் சொல்றேன்”. கஸ்டம் தான், ‘கடவுள் கடவுள்னே வாழ்ந்துட்டு’, இப்படி பேசுறதுன்னு நினைச்சாலே, கஷ்டம் தான். ஆனா, நான் ‘கடவுள் இல்லன்னு’ சொல்லலேயே? கடவுளுக்கு ‘சக்தியே’ கிடையாதுன்னு சொல்லலேயே? ‘பைபிள’ நம்பக்கூடாதுன்னு சொல்லலேயே? பிளஸ், உங்க அத்தன கேள்விக்கும் பதில் சொல்றேன்னு வேற சொல்றேன்!!!பின்ன ஏங்க உங்களுக்கு ‘இம்புட்டு’ தயக்கம்?

                        பதில் சொல்றதுக்கான “பிள்ளையர் சுழிய” போட நா ரெடி!...Are You Ready??? 

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​ **for non commercial use only**

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.