3 மணி நேரம் ஒதுக்க முடியுமா? | பாரதி மேரி | VeritasTamil

3 மணி நேரம் ஒதுக்க முடியுமா?
குடும்பங்கள் இன்று பெரும்மளவில் குடும்பம் என்று இல்லாமல் கடமைக்கென நாம் வாழ்கிற விடுதிகள் ஆகிவிடுகிறது. பணம் தேவை தான் அனால் குடும்ப உறவுகள் பணத்தை விட உயர்ந்ததா ?
நிக் 10 வயது சிறுவன். அவன் பெற்றோருக்கு ஒரே மகன். அவன் அப்பா ஒரு பிஸியான தொழிலதிபர், அவரால் தன் மகனுடன் நேரம் செலவிடவே முடியவில்லை. நிக்கின் அப்பா அவன் மகன் தூங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவார் மற்றும் எழுவதிற்குள் வேலைக்கு சென்றுவிடுவார். நிக்கிக்கு மற்ற குழந்தைகளின் அப்பாக்கள் போலவே தன் அப்பாவும் அவனோடு வெளிய செல்லவேண்டும் நேரம் செலவழிக்க வேண்டும் என்று ஒரு ஏக்கம் இருந்தது.
ஒரு நாள், மாலையில் தன் அப்பாவை வீட்டில் பார்த்ததும் நிக் ஆச்சரியப்பட்டான்.
அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம். – நிக் சொன்னான்
ஆமாம், மகனே, என் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது, என் அடுத்த விமானம் 2 மணி நேரம் தாமதமானது. அதனால் நான் வீட்டில் இருக்கிறேன்”. – என்று அவன் அப்பா பதிலளித்தார்.
நிக் அப்பாவிடம் , அப்பா, நான் உங்களிடம் பேச விரும்புகிறேன், உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து? என்றான்
அதற்க்கு அப்பா ஆமாம், என் அன்பு மகனே, நீ கேளு என்றார்
நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள் அப்பா. நாளை மதியம்! என்றார்
நிக்: அப்பா, நீங்கள் ஒரு வருடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?
அப்பா: அன்பே, இது மிகப் பெரிய தொகை, அதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.
நிக்: சரி அப்பா, நீங்கள் சம்பாதிக்கும் தொகையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
அப்பா: ஆமாம் என் அன்பே. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மையில் நான் ஒரு சில மாதங்களில் எங்கள் புதிய கிளையையும் ஒரு புதிய தொழிலையும் தொடங்க திட்டமிட்டுள்ளேன். அது மிகவும் அருமையாக இல்லையா?
நிக்: ஆமாம், அப்பா. அதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அப்பா: சரி, உங்களுக்கு வேறு ஏதேனும் கேள்விகள் உள்ளதா நிக்?
நிக்: அப்பா, நீங்க ஒரு வருஷம் அல்லது மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்கன்னு சொல்லவே வேணாம். ஆனா ஒரு நாள் அல்லது அரை நாள்ல என்ன சம்பாதிக்கிறீங்கன்னு சொல்ல முடியுமா?
அப்பா: நிக், என்ன கேட்கிறாய்? உங்களுக்கு எல்லா தருகிறேன் உங்களுக்கு அதில் மகிழ்ச்சி இல்லையா?
நிக்: அப்படி இல்லை அப்பா, நீங்க எப்பவும் எனக்கு சிறந்ததைத்தான் கொடுத்திருக்கீங்க, ஆனா எனக்கு பதில் சொல்லுங்க. ஒரு மணி நேரத்துல எவ்வளவு சம்பாதிக்கிறீங்கன்னு சொல்ல முடியுமா?
நிக் அம்மாகிட்ட தனக்கு ஆதரவு தரச்சொன்னான். நிக்கும் அம்மாவும் தினசரி வருமானம் இல்லன்னா, அவருடைய மணிநேர வருமானத்துக்கு பதில் சொல்லச் சொன்னார்கள்.
நிக்கின் அப்பா, ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- இருக்கும்னு பதில் சொன்னார்.
நிக் மாடியில இருக்கிற தன் அறைக்கு ஓடிப்போய், ஒரு உண்டியலை சுமந்துட்டு கீழே எட்டிப் பார்த்தார்.
அப்பா, இந்தப் பெட்டியில ரூ.3000/- இருக்கு. என்னோட மூணு மணி நேரம் ஒதுக்க முடியுமா? நாளைக்கு சாயங்காலம் கடற்கரைக்குப் போய் உங்க கூட இரவு உணவு சாப்பிடணும். இதை உங்க அட்டவணையில குறித்துக்க முடியுமா?
நிக்கின் அப்பா வாயடைத்துப் போனார்!
பணத்தின் பின்னால் ஓடுவதால் குழந்தைகள் பெற்றோரின் அன்பும் அக்கறையும் இல்லாமல் போகிறார்கள். பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது! இன்றும் பல குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலை வேலை என்று தன் குழந்தைகளின் நேரம் மறந்து பணம், சமூகத்தில் அந்தஸ்து என்று தான் இருக்கிறார்கள். வாழ்கிற நாட்கள் தன் குடும்பத்தின் நினைவுகளோடு வாழாமல், வருங்காலம் நமக்கு பணம் தேவைபடும் என்று இன்று வாழ்கிற வாழ்க்கையை நேரத்தை மறந்துவிடுகிறோம். சிந்திப்போம் !
இர. பாரதி
Daily Program
