பெத்லகேமில் கேள்விக்குறியாகும் கிறித்தவர்களின் வாழ்க்கை | Veritas Tamil

வத்திக்கானில் திருத்தந்தை லியோவை நேரில் சந்தித்த பெத்லகேம் மேயர் மஹர் நிக்கோலா கனவதி. புனித பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும். போரை நிறுத்தி, புனித பூமியில் கிறித்தவர்களைப் பாதுகாக்க ஆதரவளிக் கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

குறைந்து வரும் பாலஸ்தீனக் கிறித்தவர்களின் எண்ணிக்கை: நடக்கும் வன்முறை நிகழ்வுகளால் மக்கள் பெத்லகேம் மற்றும் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும், பெதலகேமைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் இப்போது நகரத்தின் சொந்த மக்கள்தொகையுடன் போட்டியிடுகின்றன என்றும், இது இயற்கை வளங்களின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. என்றும் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனப் பகுதிகளில் பாலஸ்தீனக் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்துக் கவலை தெரிவித்த அவர், பாலஸ்தீனக் கிறித்தவர்கள் புனித பூமியில் தற்போது 1,68,000 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அதே நேரத்தில் உலகம் முழுவதும் 4 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனக் கிறித்தவர்கள் உள்ளனர்; இது கிறித்தவர்கள் மீது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெத்லகேமின் மேயராகக் கிறித்தவர்களே இருக்கவேண்டும். சட்டப்படி, பெத்லகேமின் கிறித்தவராக இருக்கவேண்டும்: இது நிலைநிறுத்தப்பட்ட பாலஸ்தீனத் தலைவர்களால் ஒழுங்குமுறை. ஏனென்றால், அவர்கள் பெத்லகேமில், புனித பூமியில், பாலஸ்தீனத்தில் வாழும் உலகின் பழமையான கிறித்தவச் சமூகத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்த அவர், பலர் இன்னும் வெளியேறிக்கொண்டே இருப்பதாகவும் கடந்த ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் கண்டா அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் குடிபெயர்வதற்கு ஒப்புதல் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்

ரேஷன் முறையில் தண்ணீர் பெறும் அவலம்: திருப்பயணம் மற்றும் சுற்றுலாவை நம்பி யிருந்த பெத்லகே லகேமின் பொருளாதாரம், அக்டோபர் 7. 2023 அன்று மூண்ட போரிலிருந்து பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது; பரிசுப் பொருள்கள் அழகான அங்காடி. ஆலிவ் மர வேலைப்பாடுகள்,முத்து மற்றும் நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறைகள் எனப் பலவும் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தடை உத்தரவு என யாவும் மிகவும் மோசமாகி, மக்களைத் திணறடித்தது என்றும், பெத்லகேமில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த இடத்திலே தண்ணீரைத் தோண்டி எடுக்க அனுமதிக்கப்படாததால் தண்ணீர் ரேஷன் முறையில் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இஸ்ரயேலிரிடமிருந்து தாங்கள் தண்ணீரை வாங்குவதாகவும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையானதில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே அவர்கள் விற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 134-க்கும் மேற்பட்ட தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள், நகரத்திற்குள் தடை உத்தரவு யாவும் மக்களின் சுதந்திரத்தை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களின் வளமான எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

பெத்லகேம் மக்களுக்காக எழுந்த குரல் அண்மையில், பிறநாடுகளிலிருந்து திருத்தந்தையிட மிருந்தும், இத்தாலி மற்றும் பிற நாடுகளிலிருந்தும் எழுந்த ஒற்றுமைக்கான குரல் ஓர் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், இது மக்களுக்கு அதிக நம்பிக்கையைத் தருவதாகவும், நம்மைப் பற்றியும் அக்கறை கொண்ட ஒருவர் இருக்கிறார் என்ற சிந்தனையைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீனத்திலும், காசாவிலும் பெத்லகேமிலும் நடப்பதைத் தடுக்கும்போதுதான் புனித பூமியைப் பாதுகாக்க முடியும் என்றும், பெநலகேமிலிருந்து நம் மக்கள் வெளியேறாமல் இருக்க அவர்களை ஆதரிக்க வேண்டுமென்பதே இப்போது நாம் செய்ய வேண்டிய உடனடிச் செயல் என்றும் அவர் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்ச் சூழலை அறிந்துகொள்ள பெத்தலகேமின் வரலாறு ஒரு பார்வை இறைய பெத்லகேமின் வரலாற்றுச் சூழல பற்றி அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம், எருசலேமுக்குத் தெற்கே சுமார் பத்து கிலோமீட்டர் (ஆறு மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 28,591 மக்கள் வாழ்ந்தனர். இந்நகரத்தின் பொருளாதாரம் முற்றிலும் சுற்றுலாவை மையமாகக் கொண்டது.

1099-ஆம் ஆண்டு வரை இஸ்லாமியர்கள் இந்நகரத்தை ஆட்சி செய்ததும், 1948 வரை இது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்ததும், பின்னர் 1948 அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பிறகு ஜோர்டானால் இணைக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியாக இருந்ததும் வரலாறு. 1967 போருக்குப் பிறகு பெத்லகேமின் மேற்குக் கரை இஸ்ரேவால் ஆக்கிரமிக்கப்பட்டது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான 'ஒஸ்லோ ஒப்பந்தத்தால் பெத்லகேம், பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக அறிவிக்கப்பட்டது; ஆனால், அது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பெத்லகேமில் வாழ்ந்துவரும் கிறித்தவக் குடும்பங்கள், இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கான நில கையகப்படுத்தலால், வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வரலாற்றின்படி அரபு கிறித்தவர்களின் நகரமாக பெத்லகேம் இருந்தது. 1950-களில் 86% இருந்த இம்மக்கள். 2022-இல் 10% ஆகக் குறைந்து, தற்போது பெரும்பான்மையான அரபு முஸ்லிம்களைக் கொண்டுள்ளது.

2000 மற்றும் 2005-க்கு இடையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டமாக இருந்தபோது, மேற்குக் கரைச் சுவர் அல்லது மேற்குக் கரைப் பிரிவினைத் தடைச் சுவர் என்று அழைக்கப்படும் சுவர் அங்கே கட்டப்பட்டது.2002-இல் கட்டப்பட்ட இந்தத் தடுப்புச் சுவர் மேற்குக் கரையிலிருந்து தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாலஸ்தீன அரசியல் வன்முறைக்கு எதிரான ஒரு தேவையான பாதுகாப்புத் தடையாக இஸ்ரேல் இந்தச் சுவரை விவரிக்கிறது; ஆனால், அதே நேரத்தில் பாலஸ்தீனியர்கள் இதை இனப் பிரிவினையின் ஓர் அங்கமாகவும் இஸ்ரேலிய நிறவெறியின் அடையாளமாகவும் பார்க்கிறார்கள்; ஆகவே, அவர்கள் இதை "இனவெறிச் சுவர்" என்றே அழைக்கின்றனர்.

அதிகரித்த பதட்டங்களின் போது இந்தத் தடைச் சுவர் தொடக்கத்தில் ஒரு தற்காலிகப் பாதுகாப்பு நடவடிக்கையாக முன்வைக்கப்பட்டாலும், அது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அரசுக்கும் இடையிலான எதிர்கால அரசியல் எல்லையுடன் தொடர்புடையதாகவே இன்று கணிக்கப்படுகிறது. பெத்லகேமை அதன் இதயமான எருசலேமிலிருந்து பிரிக்கும் இத்தடுப்புச் சுவரால் பெத்லகேமியர்கள் எத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதன் அடையாளமாக இருக்கிறது என்று மேயர் மஹர் நிக்கோலா திருத்தந்தையிடம் தெரிவித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.