மாற்றம் ஒன்றே மாறாதது || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.06.2024

மாற்றம் ஒன்றே மாறாதது

விதையின் மாற்றமே வேர்
நேற்றைய மாற்றமே இன்று
சேமிப்பின் மாற்றமே முதலீடு
அறியாமையின்
மாற்றமே அறிவு

தோல்வியின் மாற்றமே வெற்றி
துன்பத்தின் மாற்றமே இன்பம்
இரவின் மாற்றமே பகல்
கோபத்தின் மாற்றமே அன்பு

குழந்தையின் மாற்றமே மனிதன்
நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை

கல்வியின் மாற்றமே நாட்டின் வளர்ச்சி
முடியதென்பதன் மாற்றமே முடியும்

இப்படி பல மாற்றங்களுக்கு பிறகே நமது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே. வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது

எனவே தங்களின் நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் மாற்றங்களுக்குத் தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் முயற்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி

Comments

Regina (not verified), Jun 06 2024 - 1:42am
Dear Sir,
Very pleased to read through your writing.
Ending your thoughts with an apt and simple prayer is encouraging.
Our Lord and Our Mother Mary will do wonders in your endeavour.
God bless.
Regina
reginadavid0164@gmail.com
+918431987306