மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள் "காசா நகரம் வேறு ஒரு தீர்வை தேட வேண்டும்" - திருத்தந்தை | Veritas Tamil

திருத்தந்தை: மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள் - "காசா நகரம் வேறு ஒரு தீர்வை தேட வேண்டும்".
செவ்வாய்க்கிழமை மாலை, வத்திக்கானுக்கு திரும்புவதற்கு முன் காஸ்டெல் காந்தோல்போவை விட்டு வெளியேறும் போது, திருத்தந்தை லியோ XIV காசா நகரத்திலிருந்து மக்கள் வெளியேறுவதைக் குறித்து வருத்தம் தெரிவித்தார். "இது ஒரு கவலையான நிலை. பலருக்கு செல்ல இடமே இல்லை" என்றார் அவர்.
அவர் காசா நகரத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் பங்குதந்தை கப்ரியேல் ரோமானெல்லியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், 450 பேர் அந்த ஆலய வளாகத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் கூறினார். "அவர்கள் இன்னும் தங்கியிருக்க விரும்புகிறார்கள். ஆனால், நாம் உண்மையில் வேறு ஒரு தீர்வை தேட வேண்டும்," என்றார்
அதே நாளில், திருத்தந்தை லியோ அருட்பணி ரோமானெல்லியை அழைத்து, நிலைமையைப் பற்றி நேரடியாக அறிந்துகொண்டார்.
ரஷ்யாவுடன் நடக்கும் போர் பதற்றம் குறித்து கேட்கப்பட்ட போது, "நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) (NATO) எந்தப் போரும் தொடங்கவில்லை. போலந்து மக்கள் தங்கள் வான்வழி மீறப்பட்டதாகக் கவலையுடன் இருக்கிறார்கள். இது மிகவும் பதற்றமான சூழ்நிலை" என்றார் திருத்தந்தை.
திருத்தந்தை புறப்படுவதற்கு முன், அவருக்கு மக்கள் “பிறந்த நாள் வாழ்த்துகள்” மற்றும் நாமநாள் வாழ்த்துகள்” எனக் கோஷமிட்டனர். செப்டம்பர் 17ஆம் தேதி புனித ராபர்ட் பெல்லர்மின் திருநாளாகும். போலந்து நாட்டைச் சேர்ந்த சில நம்பிக்கையாளர்கள் அவருக்கு மலர் மொட்டையும, ஒரு குறிப்பு கடிதத்தையும் வழங்கினர்.
Daily Program
