'இளம் தலைமுறையினர் கிறித்தவப் புனித நூல்களை எளிதாக அணுகவேண்டும்'| Veritas Tamil
'இளம் தலைமுறையினர் கிறித்தவப் புனித நூல்களை எளிதாக அணுகவேண்டும்'
தொழில்நுட்பக் காலத்தின் வலைக்குள் சிக்கி இருக்கும் இளம் தலைமுறையினர் புனித போதனைகளை எளிதாக அணுக முன்வரவேண்டும் எனத் திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கானில் கத்தோலிக்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, அவர்கள் மக்களுக்காக ஆற்றிவரும் பணியைப் பாராட்டி
தனது நன்றியையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்த அவர் தெய்வீக வெளிப்பாடு குறித்த கோட்பாட்டு அரசியலமைப்பான வொய்மித்தின் 60-வது ஆண்டு நிறைவையும், புனித நூல்களை எல்லா இடங்களிலும் எளிதாக அணுகவும் மகிமைப்படுத்தவும் அ அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் தெய்வீக வெளிப்பாடு குறித்த போதனை சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளதாகவும், கடவுளின் வார்த்தையைப் பயபக்தியுடன் கேட்கவும், அதை நம்பிக்கையுடன் அறிவிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளதாகவும் திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய சூழலில், இளம் தலைமுறையினர் புதிய டிஜிட்டல் உலகில் வாழ்கின்றனர் எனவும், அங்கு கடவுளின் வார்த்தை எளிதில் மறைக்கப்பட்டு விடுவதாகவும் குறிப்பிட்டு, இளம் தலைமுறையினர் புனித போதனைகளை எளிதாக அணுக முன்வா வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.