அன்பும் மகத்தான இரக்கமும் கிறிஸ்துவின் சிலுவையில் தான் இருக்கிறது - திருத்தந்தை பிரான்சிஸ் உரை
கடவுளின் அன்பின் வலிமையால் நம்மை மாற்ற அனுமதிக்க வேண்டும். அவ்வலிமை நம்மை விட பெரியது மற்றும் நாம் நினைத்ததை விட அதிகமாக அன்புகூறும் திறன் கொண்டது ஒரு புனிதராக இருப்பதற்கு மனித முயற்சி அல்லது தனிப்பட்ட அர்ப்பணிப்பைக் காட்டிலும் உயிர்த்தியாகமும் துறப்பும் அதிகம் தேவைப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சிலுவை மரணத்திற்கு உண்மை அன்பு மட்டுமே சான்றாக அமைய முடியும் என்றும் வத்திக்கான் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் கருத்தரங்கம் ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
இந்தக் கருத்தரங்கின்போது நீங்கள் புனிதப்படுத்தப்பட்ட புனிதத்தின் இரண்டு வடிவங்களான மறைசாட்சியம் மற்றும் வாழ்க்கை அர்ப்பணிப்பு குறித்து கலந்துரையாடினீர்கள் என்று உரைத்த திருத்தந்தை, தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்துவின் மீதும் திருஅவையின் மீதும் கொண்ட அன்பிற்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் உயர்வானவர்களாகப் போற்றப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அவர்கள் தங்கள் கல்லறைகளை வழிபாட்டு மற்றும் இறைவேண்டல் தலங்களாக மாற்றினர் என்றும், உயிர்த்த கிறிஸ்துவில் இரத்தம் தோய்ந்த மற்றும் பாடுகள் நிறைந்த மரணத்தின் வரம்புகளை மீறும் சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்த அவர்கள் தாங்கள் விண்ணகத்தில் பிறந்த நாளில் (மரணமேற்ற நாளில்) ஒன்று கூடினர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மறைச்சாட்சியர்களில் கிறிஸ்துவைப் பின்பற்றி, தன்னை மறுத்து, சிலுவையை தூக்கிக்கொண்டு, தன் பிறரன்பு பயால் உருமாறி, தன் சிலுவையின் மீட்கும் வலிமையை அனைவருக்கும் காட்டிய பரிபூரண சீடனின் தனிச்சிறப்புகளைக் காண்கிறோம் என்றும் புனிதர்களின் புனிதர்பட்ட நிலைக்குரிய பின்னணியில், திருஅவையின் பொதுவான உணர்வு உயிர்த்தியாகத்தின் மூன்று அடிப்படை கூறுகளை வரையறுத்துள்ளது என்பதையும் விளக்கி கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.