பழங்குடி இன மக்களோடு பயணம் செய்யும் புனித வின்சென்ட் தி பால் சபை | வேரித்தாஸ் செய்திகள்

புனித வின்சென்ட் தி பால் சபை உறுப்பினர்கள், கப்புச்சின் சபை துறவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து தென்னிந்தியாவின் பழமையான இருளர் இன பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 25 அன்று பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள செஞ்சிக்குப்பத்தில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் புனித வின்சென்ட் தி பால் சபையினர் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளனர்.

வின்சென்ட் தி பால் சபையின் முன்னாள் தலைவர் திரு.ராஜ்குமார், பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவரும், திரு. ஜோசப் அரசு அதிகாரிகளோடு இணைந்து பழங்குடி மக்களுக்கான உதவி திட்டங்களில் பணியாற்றி வருபவர் இவர்கள் பழங்குடி மக்களோடு கலந்துரையாடினர்.

தனித்தனியாகவும்,குடும்பம் வாரியாக சந்தித்து குடும்ப சூழ்நிலையை அறிந்து கொண்டு குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியம் பற்றி சிந்தித்து படிக்கின்ற குழந்தைகளுக்கு நோட்டு ,புத்தகங்களும் உணவும் வழங்கப்பட்டது.

வின்சென்ட் தி பால் சபையின் துணை தலைவர் பேசும்பொழுது இருளர் சமுதாயத்தின் இன்றைய நிலை,வாழ்க்கை முறை, அவர்களின் துன்பங்கள், தூரங்கள் அவர்கள் சந்திக்கின்ற சவால்கள், கல்வியின் முக்கியத்துவம்,வேலை வாய்ப்புகள், அரசின் உதவிகளை எப்படி பெறுவது போன்றவற்றை விளக்கிக்கூறினர்.

மேலும் அருள்தந்தை சகாயம் சமூக ஆர்வலராய் இருக்கும் அவர் கூறியதாவது, இந்த இருளர் சமூதாய மக்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். நகர மக்களை சந்திப்பதற்கும் அவர்களோடு உறவாடுவதற்கும் கூச்சம் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வளருகின்ற இளைய சமுதாயம் வெளி உலக வாழ்க்கையை நோக்கி வரும்பொழுது அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை அவர்கள் வாழ்வில் கொண்டு வரும். கப்புச்சின் சபை மற்றும் அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

தற்பொழுது தமிழக அரசு இவர்களுக்கு வீடுகள் கட்டி தருவதற்கும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களில் இந்த இருளர் சமூதாயம் கைவிடப்பட்ட நிலையில் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் வந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக இந்த இருளர்கள் ஆற்றங்கரை ஓரங்களிலும், ஆற்றுப்படுகையிலும் நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள் இணைந்து வாழ்பவர்கள் ஆனால் தற்பொழுது கப்புச்சின் சபை துறவிகளின் தளிர் என்ற அமைப்பு மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை செஞ்சிக்குப்பத்தில் குடியமர்த்தி அவர்களுக்கு ஒரு நிலையான குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளனர். இது தற்காலிகமான தீர்வு என்றாலும் இவர்களுக்கு என்று நிலமோ வீடோ, மின்சார வசதி, குடிநீர் வசதி,மருத்தவ வசதி,கழிப்பிடம், குழந்தைகள் பொழுதுபோக்கு, பள்ளிகள்,நிலையான தொழில், பொருளாதாரம்,என்று எதுவும் இல்லாமல் இவர்களை ஒருங்கிணைக்க திறமையான குழுக்கள் கூட இல்லை எனபது தான் நிதர்சனம்.

இவர்கள் வாழும் பகுதி, மற்றவர்களை விட மிக தொலைவில் இருப்பதால் இவர்களால் எந்தவித தொடர்பும் மேற்கொள்ள முடியவில்லை, பிள்ளைகளும் பள்ளிகளுக்கு செல்ல இயலவில்லை. பெற்றோர்கள் தொழிலின் நிமித்தம் வெகு தூரம் சென்று விடுவதால் வீட்டையும், சகோதர சகோதரிகளையும் இவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாதத்தில் ஒரு முறை இவர்களின் பெற்றோர் இவர்களிடம் வந்து தங்கி செல்கின்றனர்.

தண்ணீர் பிடிப்பதற்கும், உணவு மற்றும் பிற தேவைகளுக்கும் நீண்ட தூரம் செல்கின்றனர். இவர்கள் வளர்ந்தபிறகு தங்களது பெற்றோருடன் இணைந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிடுவர். இதனால் இவர்களது சுயமதீப்பீடு, தன்னம்பிக்கை என்பது மிக அரிதாகவே உள்ளது. இப்பொது உள்ள நிலையில் இங்கு வாழும் குடும்பங்களுக்கு மின்சார வசதி இல்லை, உறங்குவதற்கும், தகர கொட்டகைகளில் வாழும் இவர்களின் இல்லத்தை மறைக்கும் மேற்கூரைக்கு ஒரு பிளாஸ்டிக் விரிப்பு என்பது மிக அத்தியாவசிய தேவை. மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளில் ஒழுக ஆரம்பித்து விடுகிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது என்று அருள்தந்தை சகாயம் தெரிவித்துள்ளார்.

இந்த புனித வின்சென்ட் தி பால் சபையானது 1833 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கத்தோலிக்க அமைப்பு ஆகும் இந்த அமைப்பானது சமுதாயத்தில் மற்றும் கத்தோலிக்க பங்குகளில் இருக்கும் ஏழை மற்றும் எளிய மக்களுக்க்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

_ அருள்பணி வி.ஜான்சன் SdC

(News Source from RVA English Service)