'ஜிம்பாப்வேயில் செவிலியர் பயிற்சி' டொமினிக்கன் அருட்சகோதரிகளின் சாதனை | Veritas Tamil

'ஜிம்பாப்வேயில் செவிலியர் பயிற்சி' டொமினிக்கன் அருட்சகோதரிகளின் சாதனை
சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி!
ஜிம்பாப்வேயில் கடந்த 60 ஆண்டுகளாக, செயிண்ட் தெரசா மருத்துவமனையை நடத்தி வரும் டொமினிக்கன் அருட்சகோதரிகள், ஏராளமான இளைஞர்களைச் செவிலியர் துறையில் பயிற்றுவித்து, நாட்டின் சுகாதாரச் சேவையை மேம்படுத்தி வருகின்றனர் .
1957-ஆண்டு தொடங்கப்பட்ட, 180 படுக்கைகள் கொண்ட செயிண்ட் தெரசா I மருத்துவமனை, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல், பிரைமரி கேர் செவிலியர்கள் மற்றும் 2006-ஆம் ஆண்டு முதல் ரெஜிஸ்டர்ட் செவிலியர் பயிற்சியை வழங்கி வருகிறது. 100 விழுக்காடு தேர்ச்சியுடன் மாணவர்கள் அரசு மற்றும் மிஷன் மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். மேனாள் மாணவர் கால்வின் முத்தாம்பிசி, "அருட்சகோதரிகள் நேர்மை, கருணை, மரியாதை போன்ற மதிப்புகளைக் கற்றுத்தந்தார்கள்" எனக் கூறினார்
செவிலியர் பள்ளி தலைமை அருட்சகோதரி அபோலோனியா பாண்டா, "செவிலியர் கல்வி மீது முதலீடு செய்வது, நாட்டின் எதிர்காலச் சுகாதாரத்தில் முதலீடு செய்வதற்குச் சமம்" எனக் குறிப்பிட்டு, நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களை இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.
குறிப்பாக க்வேரு மாகாணத்தில் மாணவர்கள் நாட்டின் சுகாதாரத் துறையை வளப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
“நாங்கள் 100% தேர்ச்சி விகிதத்தைப் பேணிவருகிறோம்; சேர்க்கைகள் அதிகரித்துள்ளன; எங்கள் பட்டதாரிகள் மிஷன் மருத்துவமனைகளிலும் அரசுத் துறையிலும் பணியாற்றி பிரகாசிக்கிறார்கள்” என்று அருட்சகோதரி பாண்டா கூறினார். உள்ளூர் சமூகத்தினர் பள்ளியின் பங்களிப்புக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
Daily Program
