தந்தையின் திருவுளம்-நமது நிலை வாழ்வு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பாஸ்கா3-ம் வாரம் – புதன்
தி.பணிகள் 8: 1b-8
யோவான் 6: 35-40
தந்தையின் திருவுளம்-நமது நிலை வாழ்வு!
முதல் வாசகம்.
இந்த பகுதியில், ஸ்தேவானின் மரணத்திற்குப் பிறகு திருஅவை மீது கடுமையான துன்புறுத்தல் தொடங்குகிறது. அதவே வேதகலாபனை.
அப்பொழுது கறஆஃதவ நம்பிக்கையாளர்கள் பல இடங்களுக்கு சிதறிச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகிறார்கள். பிலிப்பு சமாரியாவிற்கு சென்று கிறிஸ்துவைப் பற்றிச் சாட்சி அளிக்கிறார். அங்கே அற்புதங்களும் நடக்கின்றன; மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இந்த நற்செய்தியில், இயேசு தன்னைப் பற்றிய மிக முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியதை யோவான் விவரிக்கிறார்.
1. “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
மனிதன் உடல் பசியை உணவு தீர்ப்பதுபோல, மனிதரின் ஆன்மீக பசியை இயேசுவே தனது உடல் கொண்டு தீர்க்கிறார்.
2. என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.
இயேசுவை நம்பி, அவரிடம் நெருங்கி வாழும் ஒருவர் வாழ்க்கையில் வெறுமை, துயரம் ஆகியவற்றிலிருந்து நிச்சய்ம் விடுபடுவார்.
3. தந்தை அவரிடம் ஒப்படைக்கும் எவரையும் அவர் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்வார்.
இங்கே, கடவுள் மனிதரை இயேசுவிடம் அழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
நம் வாழ்க்கையில் நம்ம்பிக்கை என்பது தந்தை கடவுளின் கொடை.
4. நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்
இது நமது நிலை வாழ்வுக்கான வாக்குறுதி.
இயேசுவில் நம்பிக்கை வைத்தால், மரணமே முடிவு அல்ல; புதிய வாழ்வு காத்திருக்கிறது.
சிந்தனைக்கு.
நமது அன்றாட வாழ்வில் எதைத் தேடுகிறோம்? உலக விடயங்களா அல்லது உண்மையான ஆன்மீக நிறைவேற்றமா? உண்மையான ஆன்மீக நிறைவேற்றம் என்றால், அதை ஆண்டவர் இயேசு ஒருவராலேயே அளிக்க முடியும். எனவே, இயேசுவுடன் உறவு வைத்திருப்பது தினசரி வாழ்க்கையின் மையமாக இருக்க வேண்டும். நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, இறைவேண்டல், திருப்பலி, இறைவார்த்தை — இவை தான் “ஆன்மீக உணவு”.
நற்செய்தியில், இயேசுவின். “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது” உன்ற உரையைக் கேட்டவர்களில் சிலர் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். நம்பிக்கையோடு கேட்டவர்கள், தங்கள் புரிதல் முழுமையடையாத போதிலும், அவரில் நம்பிக்கைகொள்ள தொடங்கினார்கள். ஐயுறவுடன் கேட்டவர்கள் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், கோபமடைந்தார்கள் என்பதற்கு அவர்களுடைய எதிர்வினையே சான்றாக உள்ளது.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது” என்ற படிப்பினையைக் கேட்ட நமது உணர்வு எப்படி உள்ளது? இயேசு வெளிப்படுத்திய “வாழ்வு தரும் உணவு” நற்கருணை என்பதை நாம் முழுமையாக ஏற்றால், ஏன் நம்மில் சிலர் இன்றும் நற்கருணை இல்லாத சபைகளுக்கு ஓடுகிறார்? நற்கருணைக்கு ‘குருத்துவம்’ இன்றியமையாதது. அதையும் இயேசு ஏற்படுத்திக்கொடுத்தார்.
புனித ஜான் வியன்னி ஒருமுறை, “நற்கருணையை விடச் சிறந்தது எதுவும் இல்லை. கடவுளிடம் அதைவிட விலைமதிப்பற்ற ஒன்று இருந்திருந்தால், அவர் அதை நமக்குக் கொடுத்திருப்பார்” என்று கூறினார். ஆகவே, நிலைவாழ்வுக்கான ஒரே உணவு நற்கருணை. அது அன்பின் ஊற்று, இரக்கதின் ஊற்று அருள் வாழ்வின் உச்சம்.
நற்கருணையின் வழியாக நமது ஆன்மாவின் ஆழமான பசியையும் தாகத்தையும் தணிக்குமாறு இயேசு விடுத்த அழைப்பை நாம் ஏற்க மறுத்தால் நாம் அஞ்ஞானிகள் ஆவோம்.
இன்பங்கள், சுகபோகங்கள், செல்வம், கௌரவம் போன்ற பல தற்காலிக வழிகள் மூலம் அந்த நிலைவாழ்வை அடைய நாம் முயல்கிறோம். ஆனால், அவற்றில் எதுவும் பயனளிக்காது. தற்காலிக மனநிறைவு நிரந்தரமாகாது.
இறைவேண்டல்
இயேசுவே என் நற்கருணை ஆண்டவரே, நற்கருணையில் உமது மெய்யான உடனிருப்பு மீதான என் நம்பிக்கை என்றும் நிலைத்திருப்பதாக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452