ஒவ்வொரு குருவுக்கும் சீடர்கள் இருப்பது இயல்பு. அவ்வாறே, தம்மிடம் இருந்து கற்றுக்கொண்டு, தமக்குப் பின் அதே பணிகளைத் தொடர இயேசு தம் சீடர்களைத் தேர்வுச் செய்கிறார்.
ஓசேயா தன் மனைவியை நல்வழிப்படுத்த முயன்றும் தோல்வி கண்டார். அவருடன் அவள் ஒத்துழைக்கவில்லை. பழைய வாழ்வை விட்டொழிக்க அவளால் முடியவில்லை. மனமாறியிருந்தாள் அவளுக்கு புதுவாழ்வு கிடைத்திருக்கும்.
பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணமடைவேன் என்று அவரது ஆடையைத்தொட்டவுடன் அவளும் குணமடைந்தாள். பன்னிரண்டு ஆண்டுகளாக நீடித்தத் தீட்டினால் அவள் சமூகத்தில் விலக்கப்பட்டவள் (லேவி 15: 25) விடுதலைப் பெற்றாள்.
நாம் கிறிஸ்துவில் முற்றிலும் புதிய படைப்பாக மாறுகிறோம் என்பதே உண்மை. புதிய படைப்பு என்பதுதான் இயேசுவின் நோக்கம். “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ 21:5) என்கிறார் ஆண்டவர்.
நமது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் முன் இயேசு முதலில், அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகிறார். இதுவே அவருடைய முன்னுரிமை, அது நம்முடையதாகவும் இருக்க வேண்டும்.