அவர், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக அவர்களிடம் காட்டிக்கொண்டார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.
‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்பதைத் தெளிவுப்படுத்தி, இயேசுவை மணமகனாகவும், தன்னை மணமகனின் தோழனாகவும் தாழ்த்திக்கொள்கிறார்.
உலகமும் மனுக்குலமும் தோற்றுவிக்கப்பட நாள் முதல், கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. அப்படியிருக்க, கடவுள் அவரது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம்
பாவம் செய்து வாழ்பவர்கள் அலகையைச் சார்ந்தவர் என்கிறார். நாம் கடவுளிடமிருந்து வந்தவர்களாயின் கடவுளின் திருவுளத்திற்கு எற்ப வாழ வேண்டும் என்பதை யோவான் வலியுறுத்துகிறார்
இயேசு, ‘கிறிஸ்து’ என்பதை ஏற்க மறுப்பவர் என்றும் கிறிஸ்துவுக்கு எதிரானவர் ஆவார். இயேசுவே கிறிஸ்து என்று பறைசாற்றுபவர்கள் இயேசுவுக்கும் தந்தைக்கும் உரியவர்கள்
இன்று ஆண்டின் தொடக்க நாள். இந்நாளை திருஅவை அன்னை மரியா இறைவனின் தாய் எனும் மறை உண்மையைக் கொண்டாடி மகிழ்கிறது. கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவைக் குறித்து வரையறுக்கப்பட்ட நான்கு கோட்பாடுகள் உண்டு. அவற்றில் முதலாவது மரியா இறைவனின் தாய் என்பதாகும். இக்கோட்பாடு கி.பி. 431-ல் இயற்றப்பட்டது.
மாசில்லாக் குழந்தைகள் தினம் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் அவதரித்தபோது அவருக்காக உயிர் நீத்த குழந்தைகளின் தியாகத்தை நினைவூட்டும்விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
நாம் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் கவனம் செலுத்துகிறோம். எலியா இறைவாக்கினர் அற்புதமாக விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால், ஆண்டவரின் நாளுக்காக மக்களைத் தயார்படுத்துவதற்காக அவர் உலகம் அழியும் முன் திரும்பி வருவார்
சுரங்கத் தொழிலாளர்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான எளிய வழி, உங்களைச் சுற்றிப் பார்த்து, உங்கள் வாழ்க்கையின் எத்தனை வசதிகள் பூமியில் இருந்து வெளியேற்றப்படும் கனிமங்களைச் சார்ந்தது என்பதை உணர வேண்டும்.