புரிந்துணர்வு | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
புரிந்துணர்வு
ஒரு கலை. அனைவருமே கலைஞர்கள் இல்லை என்பதாலோ என்னவோ, புரிந்துணர்வு கடினமானதாகவே இருக்கிறது!
அன்பின் மற்றொரு பெயர் புரிந்துணர்வு. புரிந்துணர்வு இல்லாமல் அன்பு செய்வது ஆழமற்றது;
அன்பு செய்யாமல் பிறரைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது.
புரிந்துணர்விலிருந்து தான் உண்மையான அன்பு ஊற்றெடுக்கிறது!
உங்களைப் பற்றிய உள்ளார்ந்த புரிந்துணர்வு, பிறரைத் தீர்ப்பிடாமல், சரியாகப் புரிந்துகொள்ள வழிகோலும்;
கடந்த காலம் பற்றிய தெளிவான புரிந்துணர்வு, எதிர்காலத்தை உருவாக்க உதவி செய்யும்!
புரிந்துணர்வு அறிவைவிட ஆழமானது. நம்மை அறிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்; ஆனால், புரிந்து கொண்டவர்கள் வெகு சிலராகவே இருப்பார்கள்!
உங்கள் அமைதியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களால், உங்கள் வார்த்தைகளையும் புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கும். புரிந்துணர்வே பிறருக்கு நீங்கள் அளிக்கும் அற்புதப் பரிசாக அமையட்டும்!
வாழ்க வளமுடன் நலமுடன்