மலைப்பன்றோ !!! மலையின் மகத்துவம் | எழுத்து அருட்சகோதரி செலஸ்டி சலேஸ் SSAM மீஞ்சூர் | Veritas Tamil
மலைப்பன்றோ !!! மலையின் மகத்துவம்
மலையின்...
அழகில் அன்பானவராய்,
அருவியில் அழகானவராய்,
அமைதியில் தூதுவராய் - திகழ்கின்றாய் இறைவா
மலையின்...
பசுமையில் பாசமானவராய்,
பனிவிரிப்பில் பரிசுத்தமானவராய்,
பாறையில் ஈரமுள்ளவராய் - இருக்கின்றாய் இறைவா
மலையின்...
மலர்களில் மணம்சேர்ப்பவராய்,
கனிகளில் வண்ணம் சேர்ப்பவராய்,
மரங்களில் நிறம் சேர்ப்பவராய் - திகழ்கின்றாய் இறைவா
மலையின்...
உயிர்களில் உயிரளிப்பவராய்,
மூலிகையில் குணமளிப்பவராய்,
மேகங்களில் வளமருள்பவராய் - இருக்கின்றாய் இறைவா
மலையின்...
தேனில் சுவையூட்டுபவராய்,
இல்லங்களில் உடனிருப்பவராய்,
பள்ளங்களில் பராமரிப்பவராய் - திகழ்கின்றாய் இறைவா
மலையின்...
தென்றலில் தேற்றுபவராய்,
குளிரில் அரவணைப்பவராய்,
கோடையில் நிழல் தருபவராய் - இருக்கின்றாய் இறைவா
மலையின்...
பயணத்தில் இதமளிப்பவராய்,
வளைவில் அரணானவராய்,
சறுக்களில் கரம்கொடுப்பவராய் - திகழ்கின்றாய் இறைவா
மலையின்...
ஒழுக்குநீரில் தூய்மையானவராய்,
பாறையில் ஊற்றானவராய்,
நிசப்தத்தில் எதிரொலிப்பவராய் - இருக்கின்றாய்இறைவா
மலையின்...
இயற்கையில் இணைப்பாளராய்,
பகலில் மேகத்தூணாய்,
இரவில் நெருப்புத்தூணாய் - திகழ்கின்றாய் இறைவா
மலையின்...
பக்தனில் அருளளிப்பவராய்,
சித்தனில் ஞானமருள்பவராய்,
கோவிலில் ஆசீரளிப்பவராய் - திகழ்கின்றாய் இறைவா
இறைவா நீர், உயிர்களின் சங்கமமாய், உணவாய், எல்லையாய், பூமிகளுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாய், மழைதரும் மேகமாய், கண்கவர் வண்ணமாய் கம்பீரமாய் புகழோடு நன்றாய் ! இறைவா ! போற்றி! போற்றி ! நிற்கின்றீர் ! இறைவா நீர் குன்றாய் நிற்கின்றாய்.
எழுத்து
அருட்சகோதரி செலஸ்டி சலேஸ் SSAM மீஞ்சூர்