இயற்கையின் இசைவில் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.07.2024

                                                    "இயற்கையின் இசைவில்"

நாளை சொந்தமில்லை.

இருந்தும்.

முயற்சியுடன் மனிதன் முயல்கிறான் 

மழைத்துளி சொந்தமில்லை 

இருந்தும் நம்பிகையுடன்

பாலைவன கள்ளிச்செடி 

கூந்தலுக்கு சொந்தமில்லை.

இருந்தும்

மலர்ந்து கொண்டே இருக்கும்,
காகிதப்பூ 

நிலவோ, பூமியோ எதுவும் சொந்தமில்லை 

இருபினும்

கையை நீட்டியவாறு  சிறு குழந்தை 

இவைகள் அனைத்தும் எதன் அடிப்படையில் முயன்று கொண்டிருக்கிறது?

இயற்கை என்ற இறைசக்தியின் அன்பின் நிமித்தமும் உற்சாகத்தின்  நிமித்தமும் தானே!

இதே முயற்சியும், 
உற்சாகமும், 
அன்பும் 
குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பையையும்  கடமையையும் 

இயற்கை நம்மிடமே வழங்கி 

நம்மை வாழச் சொல்லி வழி காட்டிக்கொண்டு இருக்கிறது 

இயற்கையோடு இசைந்து வாழ்ந்து இறையின் அன்பில் திளைத்திருப்போம்  

இயற்கையின் இசைவில்

சாமானியன் 
ஞா. சிங்கராயா் சாமி
கோவில்பட்டி