நமது மாட்சிக்கு அல்ல அனைத்தும் அவரது மாட்சிக்கு! |ஆர்கே. சாமி | Veritas Tamil

19 ஜூலை 2025
பொதுக்காலம் 15 ஆம் வாரம் – சனி
விடுதலை பயணம 12: 37-42
மத்தேயு 12: 14-21
நமது மாட்சிக்கு அல்ல அனைத்தும் அவரது மாட்சிக்கு!
முதல் வாசகம்.
முதல் வாசகம் கடவுள் இஸ்ரயேலர்களின் மூதாதையர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலர்கள் ஏறக்குறைய 430 ஆண்டுகளுக்குப் பின் எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். இங்கே விவரிக்கப்படும் விபரங்கள் அவர்கள் இரவோடு இரவாக, அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயச் சூழலை வெளிப்படுத்துகிறது.
இது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு-இஸ்ரேல் மற்றும் யோசேப்பு ஆகியோரின் கதையின் உச்சக்கட்டமாகவும் பார்க்கப்படுகிறது - அவர்களின் சந்ததியினர் இறுதியாக எகிப்தை விட்டு வெளியேறி அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நாட்டை நோக்கு கடவுள் வழிநடத்துகிறார். இந்த நிகழ்வு எபிரேய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இது ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பெருவிழாவாக நினைவுகூரப்படுகிறது. இது "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு" கடவுள் அளித்த சுதந்திரத்தையும், இஸ்ரயேலர்களுக்கு அவர்களின் சொந்த நிலத்தை வழங்குவதாக கடவுள் அளித்த வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தையும் குறிக்கிறது.\
நற்செய்தி.
இயேசு தமக்கு எதிரான சதித்திட்டங்களுக்கு அளித்த பதிலை நற்செய்தி முன்வைக்கிறது. அவரைக் கொல்ல எழும் சதித்திட்டங்களுக்கு மத்தியில் தனது ஊழியத்தைத் தொடர்கிறார், ஆனால் அவரது எதிரிகள் இருக்கும் எருசலேமில் அல்ல. இன்றைய வாசகத்தன் மற்றொரு முக்கிய பகுதி, ஏசாயா புத்தகத்தில் துன்பப்படும் ஊழியக்காரன் வசனங்களின் நிறைவேற்றமாக இயேசுவைக் காட்டுகிறது.
இயேசு கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளராக வந்துள்ளார். அவர் கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டவர். அவர் பணிவானவர், மென்மையானவர், அக்கறையுள்ளவர். மேலும் அவர் "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு" மட்டுமல்ல, புறவினத்தாருக்கும் உரியவராக வந்தார் என்று அறிகிறோம்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்த தம் மக்களை ஆண்டவராகிய கடவுள் அவர்கள் மீது இரக்கம்கொண்டு, மோசேயின் தலைமையில் அவர்களைப் எகிப்பிலிருந்து விடுவித்து, அவர்களை இரவோடு இரவாக மீட்டுவர வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ததை அறிந்தோம். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்கள் செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குத் திரும்புகின்றனர். சில தூற்றாண்டுகள் கடந்த அடிமை வாழ்வு ஒரே இரவுல் மீட்கப்படுகிறது. கடவுள் விழித்திருந்து மீட்டார். அவரும் ஒரு பணியாளராக மாறினார்.
நற்செய்தியில், பரிசேயர்கள் தங்கள் தப்பெண்ணத்தால் தன்னைக் கொல்லத் திட்டமிட்டதை இயேசு அறிந்ததும், அவர் ஒரு பிறவினத்தார் பகுதிக்குச் சென்றது, ஏசாயா இறைவாக்கனர் முன்னுரைத்தது நிறைவேறியதை உணர்ந்துகிறது. கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியரான இயேசு, தனது பணி வாழ்வின் நிமித்தம் நிறைவேற்றுவார் என்பதும் நிறைவேறுகிறது.
சில நாட்களுக்கு முன்பு (கடந்த வியாழக்கிழமை) நற்செய்தியில் நாம் அறிந்தவாறு இயேசு மென்மையானவர், மனத்தாழ்மையுள்ளவர், அவர் நம்மை வந்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அழைத்தார். மனத்தாழ்மையாக இருப்பது என்பது நாம் யார் என்பதை கடவுள் கொடுத்த திறனை வெளிப்படுத்தும் விதத்தில் நேர்மையாகவும் பணிவாகவும் வாழ்வதும் செயல்படுவதும் ஆகும்.
இன்றைய பதிலுரைப் பாடலும் தொடர்ந்து கடவுள் இரக்கமுள்ளவர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆகவே, கிறிஸ்து தம்முடைய சீடர்கள் சக ஊழியர்களின் அடிமைகளாக மாறுவதும், அவர்களுக்கு உதவுவதற்காக, எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று பணிக்கிறார். இராவுணவின் போது ஓர் அடிமையாக சீடர்களின் கால்களைக் கழுவியபோது அவர் காட்டியது போல, சீடர்களன் பணி வாழ்வு அமைய வேண்டும் என்கிறார்.
ஆண்டவராகிய இயேசுவின் சீடனாக இருப்பது என்பது, நற்செய்தியை பிறருக்கு எடுத்துச் செல்லவும், சொல்லவும் முயற்சிக்க வேண்டும் என்பதாகும். இது நமது பதவி மோகத்திற்கு அல்ல, மாறாக கடவுளின் மாட்சிக்கு உரியது என பணிவாழ்வை ஏற்பதாகும்.
இறைவேணேடல்.
ஆண்டவராகிய இயேசுவே, மற்றவர்கள் மீது உமது அன்பான அக்கறை மற்றும் இரக்கத்திற்கு நான் முன்மாதிரியாக இல்லாத வேளைகளுக்காக உமது இரக்த்தையும் மன்னிப்பையும் நாடுகிறேன். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
