இயற்கை வைத்தியம்! இளமை ரகசியம்!

அக்டோபர் 15 உலக கைகழுவும் தினம் என்று அனுசரிக்கிறார்கள், சென்ற 2008ல் 70 நாடுகள் இதில் கலந்து கொண்டு 120 மில்லியன் குழந்தைகள் தங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவி இருக்கிறார்கள். 200 மில்லியன் மக்களுக்கு கை கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு அக்டோபர் 15 நாள் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஐக்கிய நாடுகள் சபைக் குறிப்பு தெரிவிக்கி றது. இந்தக் கைகளை கழுவுதல் என்ற ஒரு முறையை, பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். Make a Hand washing a Habit என்ற முழக்கம் பல நாடுகளில் விளம்பரப் பலகையாகவும், துண்டுப் பிரச்சாரமாகவும் விநியோகிக்கப்பட்டது.

சரி, இதெல்லாம் எதற்கு ? என் கை சுத்தமாகத் தான் இருக்கு, கூடுதலா நான் லஞ்சம் கூட வாங்குறது இல்லை. கறை படியாத கரங்களுக்கு நான் சொந்தக்காரன் என்று சொல்பவரா நீங்கள்? அப்ப... நீங்கதான் உங்கள் கைகளை நல்லா சோப்பு போட்டு கழுவ…
நாம் பயன்படுத்தும் அலுமினிய, பித்தளைப் பாத்திரங்களே அழுக்கு, பிசுக்கு, பூஞ்சைகள் தங்கும் இடமாக இருக்கின்றன. பாத்திரங்களையும் கழுவி நம் கைகளையும் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

கைகளில் சோப்புப் போட்டு இரண்டு கைகளை யும் முறுக்கி, கசக்கி, விரல் இடுக்குகளில் தேய்த்து பிறகு தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும். சாப்பிட போறேன், அதனால் வலது கையை மட்டும் கழுவினால் போதும் என்று இருக்கக்கூடாதாம். இரண்டு கைகளையுமே கழுவுவதுதான் சிறப்பு என்கிறார்கள். ஒருவேளை வத்தல், வடாகம், அப்பளம் இடது கையில் எடுத்து சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு இருக்கலாம், தண்ணீர் டம்ளரை இடது கையால் எடுத்துக் குடிக்கலாம்

Any how... சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் இரண்டு கைகளையும் கழுவுவது பெட்டர்...

ரொம்ப முக்கியமான விஷயம், கழிவறைகளைப் பயன்படுத்திய பிறகு வெளியில் வந்து கைகளை, கால்களை சோப்புப் போட்டு கழுவுவதுடன் வாயை ஐந்து முறையாவது கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை மண்ணில் விளையாடி விட்டு வந்த பிறகு கட்டாயம் கை, கால்களை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

கைகளைக் கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும் நகங்களை வெட்டி நகத்தில் அழுக்கு தங்காமல் பார்த்துக் கொள்ளவும் குழந்தைகளை பழக்கி விட்டால் பாதி வியாதி வராமல் காத்துக்கொள்ளலாம்.

எனவே, கைகளை எப்போதும் சுத்தமாக கழுவுங்க பாஸ்!!!!!

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.