இறுதித்தீர்ப்பு - மைக்கேல் ஆஞ்சலோ | Micheal Angelo

இத்தாலி நாட்டின், பண்டைய மிகச் சிறந்த சிற்பி ஆஞ்சலோ. இவருடைய முழுப்பெயர் மைக்கேல் ஆஞ்சலோ (Michel angelo). இவரது காலம் 1475-1564. இவர் மிகச்சிறந்த ஓவியர். அதோடு மிகச் சிறந்த கட்டடக் கலைஞரும்கூட, மறுமலர்ச்சிக் காலத்தில் மலர்ந்த மேதைகளில் மகத்தான கலைஞர் இவர். இவர் செதுக்கிய அழகிய சிற்பங்களே இவர் ஆற்றலுக்குச் சான்று.'

இவர் இத்தாலியில், பிளாரன்ஸ் நகருக்கு அருகே யுள்ள ஒரு கிராமத்தில் 1475இல் பிறந்தார். சிறு வயது முதலே கலைகளில் நாட்டம் உள்ளவராய் இருந்தார். இவரது தந்தை முதலில் இவரை ஓவியம் பயில அனுப்பி வைத்தார். பிறகு சிற்பப்பள்ளி ஒன்றிலும் பயின்றார். கலை ஆர்வம் மிக்க லொரென்ஸோ-டி-மெடிசி என்ற பிளாரன்ஸ் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

இவர் 1496இல் புகழ்பெற்ற ரோம்நகருக்குச் சென்றார். அங்கு இவர் முதன்முதலாக உருவாக்கிய சிலையினால், இவர் திறன் உலகுக்கு வெளிப்பட்டது. இயேசு கிறிஸ்து இறந்ததும், அவரது தாய் மேரி தன் மகனை மடியில் வைத்து, கைகளில் ஏந்திக் கொண்டது போன்றதொரு (Pieta) சிலையைச் செய்தார். மனம் உருகவைக்கும் கலை வடிவம் இது. இச்சிலை, ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் மாதா கோயிலில் வைத்து. இன்றும் மக்கள் வணங்குகின்றனர். இது இவரின் அற்புத ஆற்றலுக்கு அழியாச் சான்று.

பிறகு இவர் ரோமில் இருந்து பிளாரன்ஸ நகர் திரும்பினார். அங்கே கிறிஸ்துவின் பக்தரான தாவீது (David) என்பவரின் உருவச்சிலையை மிகப்பெரிய சலவைக் கல்லில், எல்லாரின் வியப்பையும் பரிசாகப் பெற படைத்து உயர்ந்தார்.

1505இல் இவர் திறமை கண்டு, இரண்டாம் ஜூலியஸ் என்ற போப் இவரை ரோம் அழைத்தார். அங்கு இருந்த புகழ்பெற்ற மாதாகோயிலான சிஸ்டைன் சேப்பல் (Sistaine Chapel) கட்டடத்தில் ஓவியம் தீட்டும் பொறுப்பைத் தந்தார். முதலில் மறுத்தாலும், பிறகு இசைந்து இதனைச் சிறப்பாகச் செய்து முடித்தார். 1508இல் இப்பணியைத் தொடங்கினார். தனியாளாய் அழகான, அற்புத வண்ண ஓவியம் தீட்டினார். பைபிள் கதைகளை விளக்கும் 343 வண்ண ஓவியங்களை, கூரையில் வரைந்தார். சாரம் அமைத்து, அதில் படுத்தபடியே பலமணி நேரம் செலவிட்டு, இந்த அற்புதப் பணியை, இவர் அயராது செய்து முடித்தார். ஏறத்தாழ இதுபோல் ஒருநாள், ஓர் ஆண்டல்ல, 4/2 ஆண்டுகளில் இந்த அழியாத, அரிய பணியை செய்து முடித்து, ஓவிய உலகில் அழியாத பெயரையும் தீட்டி வைத்தார். 5800 சதுர அடியில் இவை வரையப்பட்டது.

பிறகு 21 ஆண்டுகளுக்குப் பின், இதே மாதா கோயிலில் இறுதித்தீர்ப்பு (Last judgement) என்ற ஓவியத்தையும் வரைந்தார். இதுவே எல்லாவற்றிலும் அழியாப் புகழ் பெற்றது எனலாம்.

1564இல் தனது 89ஆம் வயது வரை வாழ்ந்த இவர் அற்புதக் கவிஞரும்கூட.

ஆதம் (முதல் மனிதன்) தோற்றத்தை அற்புதமாக வரைந்தவரும் இவரே. கடவுளின் விரல் ஆதம் மீது படுவது போல இது வரையப்பட்டது. பல நூலகம், கலைக்கூடம் என வடிவமைத்துத் தந்தவர். வாடிகன் நகர ஆலயம் (St. Peter's Bariliea) இவரால் சிறப்புற இறுதிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது.

இவ்விருவரோடு ராபியேல் (Raphael) 1483-1520 என்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஒருவரையும், உலகை மாற்றிய சரித்திரக் கலைஞராகக் கூறலாம். மேரியின் அற்புத ஓவியம் தந்தவர் இவர். இவை லண்டன், பாரிஸ், பெர்லின், நியூயார்க் கலைக்கூடத்தில் சாட்சியாக உள்ளன. இவரும் இத்தாலி தந்த இனிய கலைஞர். இவரும் கட்டட நிபுணர், சிற்பி என ஆஞ்சலோ போல் புகழ்பெற்றார். 37 ஆண்டுகளே வாழ்ந்து புகழ்பெற்ற மேதை இவர் எனலாம். ரோம் நகர அகழ்வு ஆய்விலும் ஆர்வம் காட்டியவர் இவர்.

இவர்கள் கலை, ஓவிய வரலாற்று சாதனை யாளர்கள். அழியாத சரித்திரம் படைத்த சான்றோர்கள் எனலாம்.