உன் அன்பை
கடவுளே உம் பாதம்
கண்ணீரோடு தேடி வந்தேன்
கருணை கூர்ந்து என்
கதறலை கேளுமையா.
உள்ளத்தின் ஆழத்தில்
ஓராயிரம் கவலைகள்
உடலையையும் உள்ளத்தையும்
ஓயாமல் வாட்டுதப்பா.
பாவம் செய்தேன்
பழிபாதகம் செய்தேன்
பரமனே உன் அன்பை விட்டு
பல மைல் தூரம் போனேன்.
தொல்லையின் பாதையில்
தொலைதூரம் வந்துவிட்டேன்.
தூக்கி விட யாருமில்லை
தூயவனே வாராயோ.
பாதைகளும் அடைக்கப்பட்டு
பாழ்வெளியாய் போனதப்பா
பாவி நான் திரும்பி வந்தேன்
பரமனே என்னை பாராயோ.
கொள்ளை நோயாலும்
கொடுமையான பசியாலும்
குற்றுயிராய் கிடக்கின்றேன்.
குற்றம் தனை மன்னிப்பாயா?
வீட்டினுள்ளே சிறையிருப்பு
வேலைக்கும் செல்ல வில்லை
வெட்ட வெளியாகி போனதையா
வேதனையை பாராயோ
மனம் மாறிய மைந்தனாய்
மறுபடியும் வந்து விட்டேன்
மனதுருகி வேண்டுகின்றேன்
மன்னித்தருள வேண்டுகிறேன்
இன்னும் ஒரு சந்தர்ப்பம் தந்தால்
இறைவார்த்தை படி என்னை மாற்றி
இறைவனே உம் பிள்ளையாக
இழந்த சொர்க்கத்தை பிடித்து விடுவேன்
மகிமையான விண்ணக வாழ்வை
மாறாது தர வேண்டி
மன்னவனே வேண்டுகிறேன்.
மாறாது செய்வாயா?