பாலைவனமாதல் வறட்சிக்கு எதிரான உலக நாள் | ஜுன் 17

பாலைவனமாதல் வறட்சிக்கு எதிரான உலக நாள்
மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை முழுவதுமாகத் தடுக்க முயல்வோமானால், பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும். இதைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபை 1994 ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றியது. உலக பாலைவன மற்றும் வறட்சி ஒழிப்பு நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றையச் சூழலில், புவி வெப்பமடைதல் என்பது மக்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்னைகளில் ஒன்று. மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கரியமில வாயு மற்றும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்ற வாயுக்களின் வெளியீட்டால் புவி வெப்பமடைந்து வருகிறது. இதனால், கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயமும் உள்ளது. குடிநீர் ஆதாரங்களான நீர்த்தேக்கங்களும், கால்வாய்களும், ஏரி குளங்களும் நீர் ஆவியாதல் காரணமாக வறண்டு காட்சியளிக்கின்றன.
இன்று மீத்தேன் ஃஹைட்ரோகார்பன் திட்டங்கள் மட்டுமல்ல, வெகு காலமாய் காவேரி முதலான பல ஆறுகளில் அள்ளப்பட்டு வந்த மணலினால் கூட நிலச்சீரழிவு மெல்ல இங்கு நடந்து வந்துள்ளது. பணம் கிடைக்கிறது என சுயநலமாய் இயற்கையை சுரண்டி நிலத்தைக் கெடுக்கும் கொடுமையை மடமை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
Daily Program
