நவீன சீன நாயகர் மா.சே.துங் | Mao Zedong

சீனாவில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி, சீனாவையே தலைகீழாய் மாற்றியது. மா.சே.துங்கின் உண்மையான கம்யூனிசம் சீனாவில் உருவாக வேண்டும் என்பதே இப்புரட்சியின் நோக்கம். லட்சக்கணக்கான சீன மாணவர்கள் இப்புரட்சியில் பங்கு பெற்றனர். அவர்கள் தங்களை 'செம்படை வீரர்கள்' என அழைத்துக் கொண்டனர். இந்த வீரர்கள் 'மாவோ' என அழைக்கப் படும் மா.சே.துங்கின் படத்துடன் சென்றனர். 1949இல் ஏற்பட்ட கம்யூனிச புரட்சியை கிராம, நகர மக்களுக்கு நினைவூட்டவும், ம.சே.துங்கின் கொள்கையில் இருந்து விலகி நிற்பவர்களை, அவர் வழிக்குக் கொண்டு வரவும், இப்புரட்சி ஏற்படுத்தப்பட்டது. 1927இல் மாவோ பேசிய பேச்சு மீண்டும் சீனா முழுதும் எதிரொலித்தது.
சீனா உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. 100 கோடியைத் தாண்டிய பெரிய நாடு இது.இதன் பரப்பு 95,61,000 சதுர கிலோ மீட்டர். சீன நாகரிகம் மிகத் தொன்மையானது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே பட்டுத் தொழில் சிறப்பு பெற்றது. காகிதம் - அச்சுக்கலை என்பது இவர்கள்
சிறப்புக்குச் சான்று. சீனாவின் முக்கிய மதம் புத்தம். கன்பூஷியஸ் போதித்த மதமும் உண்டு. இங்கே நெடுங்காலமாக மன்னராட்சியே நடைபெற்றது. 1912இல் சன்யாட்சென் என்பவர் குடியரசை ஸ்தாபித்தார். சில கால குழப்பத் திற்குப்பின் 1949இல் சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாறியது.
அரசியல் ரீதியான சீனாவை ஒன்றுபடுத்திய
தற்காலத் தலைவர் மா.சே.துங். இவர் 26.12.1893இல் சீனாவில் பிறந்தார். இவர் பிறந்த சமயத்தில் மஞ்சு வம்ச அரச ஆட்சி இருந்தது. சீனாவில் ஹூனன் (Hunan) மாவட்டத்தில் ஷோ-ஷான்(Shao-Shan) என்ற இடமே இவர் பிறந்த இடம். மஞ்சு வம்சம் முடிந்து 1912 ஹாமிங்டாங் (Nationalist) கட்சி ஒரு குடியரசை நிறுவியது. டாக்டர் சான்யாட்சென் (1866-1922) அதிபர் ஆனார். இளவயது மா.சே.துங் நேஷனலிஸ்ட் ஆர்மியில் பணிபுரிந்தார். 1918இல் பீகிங் நகருக்கு கல்வி பயிலச் சென்றார். ஏழ்மை நிலையில் அவர் சிறப்பாக கல்வி பயில இயலாது போயிற்று.
1921இல் சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம் பிக்கப்பட்டது. அதன் நிறுவனர் (founder) களில் மா.சே.துங்கும் ஒருவர்.
1927இல் பீகிங்கில் இருந்து ஹூனன் பகுதிக்கு விவசாயிகளின் ஆதரவைப் பெறும் நோக்கில் திரும்பினார். இந்த சமயத்தில் சியாங்கே - ஷேக் (General Chiang-Kai-Shek 1887-1975) 1927இல் அதிபர் ஆனார். 1937இல் ஜப்பானிய படையெடுப்பால் சீனாவிற்கு நஷ்டமே ஏற்பட்டது. இந்த யுத்தத்தின்போது சியாங்கே ஷேக் கம்யூனிஸ்ட் தலைவரான மா.சே.துங்குடன் உறவும் - தொடர்பும் கொண்டார். ஜப்பான் சீனாவை விட்டுச் சென்றதும், மா.சே.துங் சீன ஆட்சியைப் பிடிக்க ஓர் உள்நாட்டு யுத்தம் மேற்கொண்டார். இவருக்கு யுத்தத்தில், வெளிநாட்டு ஆட்சியில் மிகவும் பாதிப்பு அடைந்த விவசாயிகள் ஆதரவு மிக அதிகமாக கிடைத்தது.
இதனால் அக்டோபர் 1, 1949இல் சியாங்கேஷேக் கின் கோமிங்டாங் அரசு, தைவான் தீவுக்குச் செல்ல, மா.சே.துங் ஒன்றுபட்ட சீன மக்கள் குடியரசை நிறுவினார் (Peoples Republic of China). அதன்பிறகு மா.சே.துங் சீனாவில் பல புரட்சிகரமான சீர்திருத்தங் களை மேற்கொண்டார். எல்லா தனியார் சொத்து - நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. இவை அரசின் நிர்வாகத் திற்கு வந்தன. சீனா பற்றி உலகம் அறிய முடியாதவாறு செய்தார். எல்லோரும் அரசுக்கு உழைக்க வேண்டும். அரசு மக்களுக்கு தேவையானவற்றை செய்யும் என்பதே இவரின் தத்துவமாயிற்று. இவரது செஞ் சட்டைப்படை இவருக்கு பாதுகாப்பாக இருந்தது. இது அவர் எதிர்ப்பாளர்களை அழித்து ஒடுக்கியது. சீனாவை பலவழிகளில் முன்னேற்ற கடுமையாக உழைத்தார். மார்க்ஸ் தத்துவம் அமல்படுத்தப்பட்டு, சீனாவில் கம்யூனிச ஆட்சியை விதைத்து புரட்சி செய்தவர் இவர். 1976இல் இவர் இறந்தார். இவரது மறைவிற்குப் பிறகும் இன்றுவரை சீனாவில் கம்யூனிச ஆட்சியே தொடர் கிறது. மாபெரும் முதல் கம்யூனிஸ்ட் நாடான ருஷ்யா வில் கம்யூனிசம் தோல்வி கண்டாலும், அது சீனாவில் வீழ்ச்சி அடையவில்லை. உலகிலேயே மக்கள் தொகையில் முன்னணி நாடான சீனாவின் வரலாற்றில் மா.சே.துங்குக்கு ஓரிடம் நிச்சயம் உண்டு. பாண்டுங் மாநாடு - பஞ்சசீலம் என்று ஏற்பு செய்தாலும், இந்தியாமீது சீனா 1962இல் ஒரு படையெடுப்பை மேற் கொண்டது. எல்லைப் பிரச்சினையில் தீராத நிலையில் தான் இந்தியா-சீனா உறவு இன்றும் இருக்கிறது. இன்று உலக நாடுகளுடன் ஓரளவு நல்லுறவு கொண்டுள்ளது சீனா. மா.சே.துங் காலத்திய கம்யூனிசத்தில் சற்று மாற்றமும் 1976க்குப்பின் படிப்படியாக நிகழ்ந்துள்ளது.
Daily Program
