துணிவுக்கு ஒரு நெப்போலியன் | Nepolian
துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் ஒரு பெயர் தான் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte), ஜெனோவாவால் பிரான்ஸிற்கு விற்கப்பட்ட கார்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில் 1769 ஆகஸ்ட் 17இல் நெப்போலியன் பிறந்தான். இவன் குடும்பத்தினர் இத்தாலியப் பாரம்பர் யத்தைச் சேர்ந்திருந்தாலும், 200 ஆண்டுகளாக கார்சிகாவிலேயே வாழ்ந்து வந்தனர். தந்தை சார்லஸ் போனபார்ட் ஏழ்மையும், இன்ப வாழ்வில் நாட்டமும் மிகுந்த ஒரு சட்ட நிபுணர். தாயார் லெட்டீஷியா சமோசினோ பேரழகும், உறுதியான உள்ளமும், செயல் திறனும் மிக்கவர்.இவர்களுக்கு 13 குழந்தைகள். நெப் போலியன் அரசின் சலுகை பெற்று வியன்னாவிலும், பாரிஸிலும் உள்ள ராணுவப்பள்ளியில் கல்வி பயின்றார். பள்ளியில் முதல்நிலை என்று கூறிட முடியாது. ஆனபோதும் கணிதம், வரலாறு, புவியியல் ஆகிய துறைகளில் அதிக அக்கறை காட்டினான். தனிமையை விரும்புகிற சுபாவம். பொறுப்புணர்ச்சி மிக்கவர். நெஞ்சில் உரம் என்ற குண இயல்போடு வளர்ந்தான் நெப்போலியன்.
இவனைப்பற்றி, இவனது ஆசிரியர் ஒருவர்."இந்த இளைஞன் கருங்கல்லால் ஆக்கப்பட்டிருந்தாலும் அவன் உள்ளே ஓர் எரிமலை இருக்கின்றது" என்று குறிப்பிட்டாராம். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்த நெப்போலியன், பிரஞ்சு துப்பாக்கிப் படைப்பிரிவில் (Artillery) சிறிய பதவியில் சேர்ந்தான்.
இச்சமயத்தில் ரூஸோ, வால்டேரின் கருத்துக்கள் இவரை மிகவும் கவர்ந்தது. நெப்போலியன் தனது ஓய்வு நேரத்தை படிப்பதிலும், கட்டுரை, புதினம் எழுதுவதிலும் செலவிட்டான். கார்சிகாவின் வரலாற்றை எழுத இவன் ஆசைப்பட்டான். இச்சமயத்தில் கிடைத்த குறைந்த சம்பள வேலையும் போனது. 1792இல் பாரிஸ் திரும்பிய நெப்போலியன் இழந்த வேலையைப் பெற மீண்டும் முயன்றான். வறுமை. கைக்கடிகாரம்கூட அடகு வைக்கப்பட்டது. அச்சமயத்தில் தியூல்லரி அரண்மனை தாக்கப்பட்டது. மன்னன் பதவி நீக்கம் - என புரட்சி நடந்த நேரம். 1792இல் ஆகஸ்ட் மாதம் நெப்போலியனுக்கு திரும்பவும் படையில் பதவி கிடைத்தது.
1793இல் குடியரசிற்காக தியூல்லரியை மீட்பதில் தனித்திறமை காட்டி வெற்றி பெற்றான்; பெருமதிப்பும் பெற்றான். பதவி உயர்வும் கிடைத்தது. அடுத்த ஆண்டு ரோபிஸ்பீரின் வீழ்ச்சியோடு தொடர்பு. நெப்போலியன் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனபோதும், அதற் கான ஆதாரம் இல்லாததால் விரைவில் விடுவிக்கப் பட்டான். 1795இல் 40 பீரங்கிகளை இயக்கி இரண்டு மணி நேரத்தில், மக்கள் கூட்டத்தை கலைந்து ஓடும்படி செய்து கன்வென்ஷனைக் காப்பாற்றிய நெப்போலி யன் தீரச்செயல் அவன் வாழ்வில் ஒரு திருப்பு முனை யானது. இச்செயலால் நெப்போலியன் உள்நாட்டு படைத்தலைவன் ஆனான்.
இந்தச் சமயத்தில் நெப்போலியன் ஜோசஃப்பைன் என்ற மாதிடம் காதல் கொண்டான். இவள் நெப்போலி யனைவிட வயதில் மூத்தவள். இரு குழந்தைகளுக் குத் தாயான கொண்டான். விதவை. அவளையே மணந்து
இச்சமயத்தில் இத்தாலியப் படையெடுப்பை தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்பு நெப்போலியனுக் குக் கிடைத்தது. அதனை முழுமையாக நெப்போலியன் பயன்படுத்திக் கொண்டான். இத்தாலியப் படை யெடுப்பை வெற்றியுடன் முடித்த நெப்போலியன், இங்கிலாந்தை தோற்கடிக்கும் நோக்கத்தோடு எகிப்தியப் படையெடுப்பையும் மேற்கொண்டான். ஆஸ்திரியா மீது வெற்றி கண்டான். இத்தாலியின் செல்வங்களையும் கவர்ந்தான். பல அழகிய இத்தாலிய கலைப் பொருள்கள் ஃபிரான்ஸ் எடுத்துவரப்பட்டன. மிகச் சிறந்த 150 ஓவியங்கள் பிரான்ஸ் வந்தன. இத்தாலி வெற்றிக்குப் பின் நெப்போலியன் மிகப்பெரிய Hero ஆனான். வியப்பும், மதிப்பும் பெருக மக்கள் வரவேற்றனர். எகிப்து படையெடுப்புக்குப்பின் இந்தியா மீதும் படையெடுக்க நெப்போலியன் திட்டமிட்டான்.
1798இல் எகிப்தின் படையெடுப்பில் 400 சிறு கப்பல்கள் கலந்து கொண்டன. 38 ஆயிரம் வீரர்கள் சென்றனர். கூடவே சென்ற விஞ்ஞானிகள், ஞர்கள் எகிப்தை ஆய்வு செய்தனர். எகிப்து பற்றிய ஒரு கலை நூலும் எழுதப்பட்டது. இதுவும் நெப்போலியன் சாதனையே. நெப்போலியன் புகழ்பெற்ற அலெக் ஸாண்ட்ரியா நகரைக் கைப்பற்றினான். பிறகு கெய்ரோவை நோக்கி முன்னேறினான். பிரமிடுகள் போர் (Battle of the Pyramids) என அழைக்கப்படும் இப் போரில் நெப்போலியன் கெய்ரோவையும் கைப் பற்றினான்
ஆனால் புகழ்பெற்ற - ஆங்கிலக் கடற்படைத் தளபதி நெல்சனின் தாக்குதலால் நிகழ்ந்த நைல்நதிப் போர் தோல்வியில் முடிந்தது. 40 கப்பலில் சென்ற பிரஞ்சுப் படையில் 2 கப்பலே மிஞ்சின. 5000 வீரர்களை பலியிட்டு, நெப்போலியன் தோல்வியே கண்டாலும், திட்டமிட்டு இதனை ஓர் வெற்றி செய்தியாகவே பரப்பினான் நெப்போலி யன்.
பலவித முயற்சிகள் காரணமாக 1792இல் பார்போன் அரசனைத் தூக்கி எறிந்து நெப் போலியன் பிரான்ஸ் அதிபராக மாறினான். மிகப்பெரிய பிரஞ்சு சாம்ராஜ்யம் என்பதே இவர் கனவாகியது. இங்கிலாந்து - ருஷ்யாவின் எதிர்ப்பு எப்போதும் பிரான்சிற்கு இருந்தது. இதனைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு நெப்போலியனுக்கு ஏற்பட்டது. 1805 ஆஸ்டர்லிட்ஸ் ஆஸ்திரியா, இங்கிலாந்தை தோற்கடித்தாலும், ருஷ்ய யுத்தத்தில் படையெடுப்பு இவரின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது.
ஒரு புரட்சியின் மூலம் பிரான்ஸ் அதிபராகவே ஆகிவிட்ட இளம் வீரன் நெப்போலியன் மிகச் சிறந்த வீரர். துணிவானவர். நல்ல முடிவு எடுக்கும் ஆற்றல் மிக்கவர். நீண்ட நேரம் உழைப்பவர். ஓய்வை அறியாதவர். மெலிந்த முகம். துடிப்பான வெண்கலக் குரல். குள்ளம்தான். உறுதியான உள்ளமே நெப்போலியன். அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்று நாயகன் நெப்போலியனே. அதிகாரமே அவன் ஆசை.
"ஒரு பாடகன் தன் வயலினை நேசிப்பதுபோல நான் அதிகாரத்தை நேசிக்கிறேன். ஒரு கலைஞனைப் போல அதை நான் உபாசிக்கிறேன்" என்று கூறியவன் நெப்போலியன்.நெப்போலியன் கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கும் வண்ணம் அரசியல் அமைப்பு ஒன்று ஒரே மாதத்தில் தயாராகியது. இதன்படி 3 கான்சல் களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. உண்மையில் முதல் கான்சல் ஆன நெப்போலியனிடமே எல்லா அதிகாரமும் இருந்தது. கொல்லப்பட்ட 16ஆம் லூயியை விட நெப்போலியன் பிரான்சில் அதிக அதிகாரம் பெற்றான்.
நெப்போலியன் ஒருமுறை 'நானே புரட்சி' என்றும், மறுமுறை 'நான் புரட்சியை அழித்தவன்' என்றும் கூறினான். ஆட்சியில் திறமைக்கு வாய்ப்பு தந்தான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆக்கினான். சமத்துவம் என்பதை ஏற்ற நெப்போலியன், 'சுதந்திரம்' என்பதை அவன் ஆதரிக்கவில்லை. எல்லா அதிகாரமும் அவனிடமே இருந்தது. பேச்சுரிமை - எழுத்துரிமை அவனால் நசுக்கப்பட்டது. வேலை வாய்ப்புகளைப் பெருக்கினான். பாரிசில் பல நகர சீரமைப்புத் திட்டங் களை நிறைவேற்றினான். ஐரோப்பாவின் அழகுமிக்க நகராக பாரிஸ் விளங்கிட ஆசைப்பட்டான். இதற்கா கவே அவன் இத்தாலியின் கலைச் செல்வங்களை சூறையாடினான்.
ஓவியம், சிற்பம், கவிஞர், பாடகர், கட்டடக்கலை நிபுணர் ஆகியோரின் பட்டியலைத் தயாரித்து, அவர்களை ஆதரித்தான். புகழ் - மதிப்பு தந்து விருது தந்து கௌரவித்தான். தேசியக்கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினான். பிரஞ்சுமொழி, லத்தீன்மொழி, அடிப்படை விஞ்ஞானம் கற்பிக்கப் பல இலக்கணப் பள்ளிகளை உருவாக்கினான். உயர்கல்வி வாய்ப்பு களைக் கூட்டினான். பிரஞ்சுப் பல்கலைக் கழக முக்கிய அதிகாரிகளை நெப்போலியனே நியமித்தான். பெண் கல்வியில் நெப்போலியனுக்கு நம்பிக்கையில்லை.
1795இல் பிரஞ்சு மொழி இலக்கிய விஞ்ஞானக் கழகம் தொடங்கப்பட்டது. பல ஆய்வுக்கு இது உதவியது. வரி வசூல் முறையை ஒழுங்கு படுத்தினான். கடுமையான நிதி சிக்கனம். ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை தரப்பட்டது. 1800இல் பிரஞ்சு வங்கி (Bank of French) நிறுவப்பட்டது. வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்பட்டது. பல கால்வாய்கள் தொழில்-வாணிக வெட்டப்பட்டன. துறைமுகம் சீர்திருத்தப்பட்டது.
இவர் செய்த இரண்டு முக்கிய செயல், ஒன்று போப்பாண்டவருடன் செய்து கொண்ட சமய உடன் பாடு. நீதித்துறைக்குப் பயன்படும் நல்ல ஒரு சட்டத் தொகுப்பைக் கொண்டுவந்தது இவர்சாதனை. நிலங்கள் பற்றிய சட்டத்தொகுப்பு, குற்றங்கள் பற்றிய சட்டத் தொகுப்பு என விரிவாக கொண்டு வரப்பட்டது.
இதுவே நெப்போலியனின் சட்டத் தொகுப்புகள் (Code-De-Nepoleon) எனப்படுகிறது. இது 1804இல் அமல் படுத்தப்பட்டது.
இவை இன்னும் பிரஞ்சு சட்டமாக நீடிக்கிறது. சட்டத்தொகுப்பில் நெப்போலியன் ஜஸ்புனியன் எனப் போற்றப்படுகிறார். நெப்போலியன் ஏறத்தாழ 40 போர்க்களம் சந்தித்தார். அதில் கிடைக்காத பெருமை இவருக்கு சட்டத்தொகுப்பில் கிடைத்தது. இதனைப் பின்னாளில் அவனே ஒத்துக்கொண்டான். சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற புரட்சிக்கருத்து இச்சட்டத்தின் சாரம்.
நெப்போலியன் அதிகாரம் - புகழ் வளர வளர கூடவே கசப்பும் எதிர்ப்பும் வளர்ந்தது. அரச கட்சியினர் நெப்போலியனைக் கவிழ்க்கக் காத்திருந்தனர். அவரைக் கொலை செய்யவும் சதி தீட்டப்பட்டடது. ஆனால் தெய்வசமாய் அதிலிருந்து தப்பினார். சதி செய்தவர் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 1802ஆம் ஆண்டு 10 ஆண்டு கான்சல் பதவியை ஆயுள் பதவியாக மாற்றிக் கொண்டான். 1804இல் பிரஞ்சு மக்களின் பேரரசன் என ஆனான்.
"பிரான்சின் அரசமுடி நிலத்தில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டேன். என் வாளால் அதை எடுத்துக் கொண்டேன்' என்றான் நெப்போலியன். தானே முடியை எடுத்து சூடி 'பேரரசர்' என அறிவித்தவன். 35ஆம் வயதில் பேரரச ஆனவன். இவனது மூளை சக்தி வாய்ந்தது. அபர நினைவாற்றல் இவனது சிறப்பு. சலியாத உழைப்பு இவன் பெருமை.
"ஒரு மேசை இழுப்பறைகளுள் பல காகிதங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போல் என் மூளையிலும் பல செய்திகள் ஒழுங்காகத் திணிக்கப் பட்டு இருக்கின்றன. எனக்கு வேண்டியதை வேண்டிய போது சிரமமோ,களைப்போ இன்றி தேர்ந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள என்னால் முடியும்".
இது அவனின் சுயவிமர்சனம். அது 100 சத உண்மையே. ஒரு நாளுக்கு 15 மணி நேரம், தேவைப்படின் 20 மணி நேரம் உழைத்தவன். சிறந்த பேச்சாற்றல். வாய்விட்டு சிரிக்க மாட்டான். அவனுக்கு நண்பர்களே கிடையாது.
1810இல் ஆஸ்திரிய இளவரசி மரியலூயிசாவைத் திருமணம் செய்து கொண்டான். பல வெற்றிகளைக் கண்டான். 1813இல் மாபெரும் தோல்வியைச் சந்தித்தான். பல முனைத்தாக்குதல். 1814 மார்ச் 31. ரஷ்ய மன்னர் அலெக்சாண்டர், பிரஷ்ய மன்னர் மூன்றாம் பிரடெரிக் வில்லியம், பிரான்ஸ் - பாரிசில் நுழைந்தனர். நெப்போலியனை எல்லா தீவுக்கும் அனுப்பினர். 19 மைல் நீளம்- 6 மைல் அகலமுள்ள தீவுக்கு மட்டுமே அரசர் என்ற இழிநிலை. 18ஆம் லூயி பிரான்ஸ் மன்னர் ஆனார். 1800இல் எல்பாதீவில் இருந்து பாரிஸ் தப்பித் திரும்பினான். ஆனபோதும் மீண்டும் தோல்வியே சூழ்ந்தது. மீண்டும் சரண் அடையும் நிலை. ஹெலினாத் தீவிற்கு நெப்போலியன் அனுப்பப்பட்டான். சாதாரண மனிதனாய் அத்தீவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தான். 1821 மே 5ஆம் நாள் -52ஆம் வயதில் வயிற்றில் புற்றுநோய் கண்டு இந்த மாவீரன் மரணம் அடைந்தான். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இவன் உடல் சீன் நதிக்கரையில் புதைக்கப்பட்டது. செயற்கரிய செய்த வீரர்கள் வரிசையில் இடம்பெற்ற ஹான்னிபால், அலெக் சாண்டர், சீசர் வரிசையில் இவன் பெயரும் என்றும் இருக்கும்.ஆம். துணிவுக்கு ஒரு நெப்போலியன் என்போம்.