சுதந்திரம்.. நிரந்தரமா? | Mariyadhivyadas


 

"எங்க வீட்ல எங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாருமே ப்ரீடம் பைட்டர் தெரியுமா?"

"அப்படியா?"

"ஆமா, வீட்ல ஃப்ரியா இருக்குற டயத்துல எல்லாம் ஓயாம பைட் பண்ணி கிட்டேதான் இருப்பாங்க...!"

ஒருத்தர் புதுசா ஒரு வீடு கட்டி அதுக்கு 'சுதந்திர இல்லம்' அப்படீன்னு பேரு வச்சாருங்க. அப்படீன்னா அதுக்கு முன்னாடி இருந்த வீட்ல அவங்களை எப்படி
கழுவிக் கழுவி ஊத்தியிருப்பாங்கன்னு நெனச்சிகணுமுங்க.

ஆதாம், ஏவாள் இரண்டு பேரையும் கடவுள் சிங்காரத் தோட்டத்துல சுதந்திரமாத்தாங்க உலவ விட்டாரு. ஆனா அவங்களால கடவுள் கொடுத்த ஒரு கட்டளையை கூட மீறாம இருக்க முடியலைங்க அதுக்கு அப்புறம்தாங்க கடவுள் மத்த, மத்த சந்ததி களுக்கு போட்டாரு ஒரு பத்து கட்டளைகளை. அதெல் லாம் சரிங்க... ஒரு கட்டளையை மீறியே கடவுளை கவுத்துப்புட்டாங்க, பத்து என்ன, நுாறு கட்டளை போட்டாலும் சனங்க ஊதித் தள்ளிடமாட்டாங்களா என்ன

ஒரு தனி மனிதனோட உரிமையை அவங்க கிட்ட குடுக்கணும், பறிக்கக் கூடாது. பொதுவா, அது தாங்க சுதந்திரம் என்பது. இதையேதாங்க எத்த னையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டவர். "அடுத்தவனுக்கு இடறலாய் இருக்காதேன்னு" நாசுக்கா சொன்னாருங்க. ஆக மொத்தத்துல ரெண்டுமே ஒண்ணுதாங்க.

கழுத்து நிறைய நகைகளை போட்டுக் கிட்டு சாமத்துல ஒரு பெண் தனியா நடந்து போகிற காலம் வர்றப்போ அதுதான் சுதந்திர காலம் அப்படீங்கறாங்க.

உக்கும்... பொதுவா பெண்கள் இம்மாம் நகைகள், பட்டுப்புடவைகள் போட்டுக்கிட்டு வெளியில் ஒய்யாரமாக நடந்து போறதே மத்தவங்க பார்த்து பெரு மூச்சு விடணும் என்கிற உயர்ந்த எண்ணத்துல தாங்க. அப்படி யாருமே பார்க்காம, பேய் அலையிற நேரத்துல போட்டுகிட்டு போறதுக்கு அவங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு!!

சுதந்திரத்தை ஒரு பெண்ணோட தாங்க ஒப்பிட்டுப் பேசுறாங்க. சுதந்திரத் தேவிங்குறாங்க. சிலையெல்லாம் வைக்கிறாங்க. ஆனா சுதந்திரத்தை எங்கே தர்றாங்க..? கன்னி மரியா தன் உறவினர் எலிசபெத்தின் பேறுகாலத்துக்கு உதவி செய்ய அவங்க வீட்டுக்குப் போறாங்க. அங்கே மூன்று மாதம் தங்கியிருந்து பணிவிடை செய்ததாக நற்செய்தி சொல்லுதுங்க. இதுக்கு மரியாவுக்கு நன்றி சொல்றதைவிட, கணவர் சூசையப்பரைத்தாங்க பாராட்டணும். எதுக்குங்கிறீங்களா? போய் எலிசபெத்தை பார்த்தோமா... பேசினோமா.... என்று வீடு வந்து சேருன்னு சொல்லாம மூன்று மாதம் தங்கியிருந்து உதவி செய்ய மரியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தாரே... அதைத் தாங்க, அந்த நல்ல எண்ணத்துக்காகத்தாங்க சூசையை நாம் பெருமை பாராட்டணுமுங்கறது.

பொதுவா ஒரு கல்யாணம் ஆனதுமே 'போச்சு மாட்டிக் கிட்டான் அப்படி... இப்படிம்பாங்க' இப்பவெல்லாம் நாட்டாமை தீர்ப்பை மாத்திதாங்க சொல்றாங்க. எப்பவும் ஒரு தலைப்பட்சமா கருத்து சொல்லப்படுத்துங்க. யாரு, யார்கிட்ட மாட்டிக்கிட்டாங்கன்னு தாலி கட்டிய அடுத்த அரை மணி நேரத்துல உண்மை நிலவரம் தெரிஞ்சிப் போயிடுமுங்க.

ஒருத்தரோட திறமையைத் தெரிஞ்சிக்கணுமின்னா முதல்ல அவங்களை சுதந்திரமா விடணு முங்க. அதிலேயே அவங்க பாஸா, பெயிலான்னு தெரிஞ்சிடுமுங்க சிலர் பெருசா பில்டப் குடுப்பாங்க, ஆனா பெரிசா அவங்ககிட்ட விஷயம் இருக்காது. சிலர் கம்முன்னு இருப்பாங்க, பயங்கர விஷய ஞானமுள்ளவரா இருப்பாங்க.

சுதந்திரம் என்று சொல்லும் போது அது இருக்கிற இடத்துல பயம் இருக்காதுங்க. இது நேச்சுரல் பார்மு லாங்க. ஒரு கருத்தை மனசில நினைச்சா, அதை சுதந்திரமா முதல்ல சொல்ல விடணும். சிலர் மனசுல எவ்வளவோ சொல்ல நினைச்சானும் சொல்ல மாட்டாங்க. முடியாது. ஏன்னா பயம் வந்து கேட் போட்டுவிடும், ஆதாமும், ஏவாளும் சுதந்திரமா சுத்தி வந்தபோது, பயம் தெரியல. தப்பு செஞ்ச பிறகு பயந்து

கிட்டு ஓடி ஒளியறாங்க. உண்மை தானேங்க மத்தவங்க உரிமையை நாம இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு தர மறுப்பது ரொம்ப, ரொம்பத் தப்புங்க. சுதந் திரமா ஏதோ கூட்டத்தைக் கூட்டி சண்டை போட்டு வம்பு பண்ணி போராட்டம், ரகளை என்பதெல்லாம் நாட்டுக்கு நாடு பெரிய லெவல்ல நடப்பதுங்க. இதுவே சின்னச் சின்ன லெவல் சுதந்திரம் வீட்லேயே இருக்கு துங்க. பெற்றோர்கள், பிள்ளைகளுக்குக் கொடுப்பது கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நாம உறவினர்களுக்கும், அக்கம், பக்கம் உள்ளவர்களுக்கும் கொடுப்பது... இதெல்லாம் இப்படித்தாங்க.

அவங்க அவங்க உரிமையை அவங்க அவங்ககிட்ட தரணுமுங்க, உரி மையை அவங்களுக்குக் குடுத்திங் கன்னா, ஒரு காரியத்தை நமக்குத் தெரிஞ்சி செய்வாங்க இல் லேன்னா, உரிமையை அவங்களே எடுத்துக்கிட்டு அதே காரியத்தை நமக்குத் தெரியாமலே செய்வாங்க. சுதந்திரம் என்ற பில்டிங் ஸ்ட்ராங் காக இருக்கணுமின்னா அதுக்கு பேசிக் நம்பிக்கைதாங்க.. நாட்டுக் குச் சுதந்திரம் முக்கியம் தாங்க அதை முதல்ல வீட்லேயிருந்து தாங்க ஆரம்பிக்கணும். வீட்ல எல்லா கதவும் திறந்திருந்தா மட்டும் அந்த வீடு காத்தோட்டமா இருக் குன்னு அர்த்தமில்லீங்க. அந்த வீட்ல உள்ளவங்க எண்ணங்கள் சுதந்திரமா இருக் கணுமுங்க. செயல்களை ஃரீயா செய்ய விடணு முங்க. அதுக்கு கணவன், மனைவி, குழந்தைகள் என்று எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம் தாங்க, கண்டிப்பு அவசியம்தாங்க. ஓவர் ப்ரீடம் உடம்புக்கு ஆகாதுங்க. ஆனா கண்டிப்பே வாழ்க்கை ஆயிடாது. சுதந்திரத்தோட அருமை தெரியிறவங்க ளுக்கு நிச்சயம் முன்னுரிமை கொடுக்கணுமுங்க கொடுத்தா முன்னேறுவாங்கங்க.

ஓர் அழகான மலர் மாலையை சுதந்திரத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லலாமுங்க. அத வேண்டப்பட்டவங்களுக்கு போட்டு அழகு பார்க்கணுமுங்க அடுத்தவங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கிற தகுதி நமக்கு இருக்குன்னா. அதை நாம் குடுக்க மறுப்பது தப்புங்க. ஒரு மலர் மாலையை எவ்வளவு காலத் துக்குத்தான் நாமே கையிலே வச்சிருக்க முடியும் அது யாருக்கும் பயன்படாம காய்ந்து போய். கசக்கி எறியறாதால யாருக்கு என்ன புண்ணியம்

ஆங்கிலேயர்கள் கிட்ட நாம சுதந்திரம் கேட்டப்ப இந்தான்னு உடனே துாக்கிக் குடுத்துட்டாங்களா? போராட்டம், போராட்டம். போராட்டம் தாங்க, கடைசியில் என்ன ஆச்சு? காலமும், கடவுளும் சுதந்திரத்தை வாங்கி நம் கையில் குடுக்கலியா என்ன? இது எல்லாத்துக்கும் பொருந்தும்தானே....?

எழுத்து - மரிய திவ்யதாஸ்

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

Add new comment

1 + 1 =