நம்முடைய நம்பிக்கை

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை - எபிரேயர் 11:1. ஆண்டவர்மீது நாம் வைத்துள்ள நமபிக்கை என்பது உறுதியாக இருக்கவேண்டும். அவை நம் கண்ணுக்கு தெரியாத போதும் அதற்கான அடையாளங்கள், வழிகள் எதுவும் தென்படாத போதும் சந்தேகமற்ற நம்பிக்கையாக இருக்க வேண்டும். 

ஆபிரகாம் ஆண்டவர் உன்னை பெரிய இனமாக்குவேன் என்பதை முழுவதுமாய் நம்பினார். உன் ஒரே மகன் ஈசாக்கை பலி  கொடு என்ற போது மறுவார்தை பேசவில்லை. மகனை பலி செலுத்த போகும் வழியில் மகன் ஈசாக் பலி பொருள் எங்கே என்று கேட்ட போது ஆபிரகாம் ஆண்டவர் பார்த்து கொள்வார் என்கிறார். அவர் விசுவசித்தப்படி ஆண்டவர் ஈசாக்கை பலியிடுவதை தடுக்கிறார். பலிபொருளாக ஆடு அங்கே நிற்கிறது. எப்படிப்பட்ட விசுவாசம்.

சிந்தனை: நம்முடைய விசுவாசம் உயிரோட்டமானதா? கண்ணில் புலப்படாத நிலையிலும் அசைவுறாததா?

ஜெபம்: ஆண்டவரே நாங்கள் விசுவாச குறைசலாக நடந்த சமயங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம். உம்மீது உறுதியான விசுவாசம் கொண்டு வாழ ஆவியானவரின் அருள் தாரும்.