காக்கும் கடவுள்

அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.

தொடக்க நூல்  21-17.

ஆகாருக்கு பிறந்த குழந்தை ஈசாக்க்கோடு இணைந்து விளையாடுவதையும் சேர்ந்து வளர்வதையும்  சாராள்  விரும்பவில்லை.

எனவே , ஆகார் குழந்தையோடு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு,  அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து கொண்டு  ,    பெயேர்செபா என்னும் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள்.

தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள். ‘குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்’ என்று கூறி,  கூக்குரலிட்டு அழுதாள்

ஆண்டவர் குழந்தையின் அழுகுரலை கேட்டு தூதர் மூலமாக பேசுகிறார். அவனையும் ஒரு பெரிய இனம் ஆக்குவேன்  என்றார்.

ஆண்டவர் கண்ணீரை காண்கின்ற கடவுள். அழுகுரலை கேட்டு பதில் கொடுக்கின்ற இறைவன். இன்றும் நாம் குரலையும் மனகவலைகளையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்.ஏற்ற காலத்தில் நமக்கு ஆசீர்வாதமான மழையை தருவார்.

 

ஆண்டவரே இந்த அதிகாலையில் உம் பாதம் தேடி வந்துள்ளோம். எங்கள் கண்ணீரை பாரும் . மனதில் பயத்தோடு வாழும் எங்கள் வாழ்வு பாலைவனம் போல் உள்ளது. நாங்கள் மீண்டும் சுதந்திரமாக ஆலய வழிபாடுகளில் ஈடுபட அருள் செய்யும். நோயின் தாக்குதல் இல்லாத உலகை எங்களுக்கு தாரும். எங்கள் திருத்தந்தை , ஆயர்கள், குருக்கள் துறவரத்தார் அனைவரையும் தீங்குக்கு விலக்கி காத்தருளும். ஆமென்.