உலக இரத்தக் கொடையாளர் நாள் | ஜுன் 14

உலக இரத்தக் கொடையாளர் நாள்
    

சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால், ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் நாள் உலக இரத்த கொடையாளர்கள நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலக்கட்டத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற இயலாமல் போனது, இரத்த பரிமாற்றத்திலும் எதிர் விளைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து 1901 ஆம் ஆண்டு காரல் லேண்ஸ்டைனர் என்பவர் இரத்ததில் உள்ள யு, டீ, யுடீ, ழு வகைகளை முதன்முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாளே இந்நாளாகும். 
    ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்த தானம் செய்வதன் மூலம், 4 உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் உடலில் 4 முதல் 6 லிட்டர்கள் வரை இரத்தம் உள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 6.8 மில்லியன் மக்கள் இரத்ததை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வளைதளங்கள், குழுக்கள், இரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட இரத்தம், உரியமுறையில் சேமிக்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டு, 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும். மருத்துவமனைகளில் இரத்தம் பெறப்படும்முன் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கபடுவார். 
    ஒருவர் உடலில் இருந்து 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக, நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடுசெய்யப்பட்டு விடுகிறது. ஆண்கள் வருடத்தில், 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். எனவே இரத்ததானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்.