'உரையாடல் என்பது ஒரு வாழ்க்கை முறை' - திருத்தந்தை லியோ அறிவுறுத்தல்! | Veritas Tamil
 
  'உரையாடல் என்பது ஒரு வாழ்க்கை முறை' - திருத்தந்தை லியோ அறிவுறுத்தல்!
வத்திக்கான், அக். 31: "நாம் வாழும் காலம்" (Nostra Actate) என்று பொருள்படும் பல்சமய உரையாடல் பற்றிய முதல் ஆவணம் 1965-இல் திருத்தந்தை பால் VI (ஆறாம் சினைப்பர்) அவர்களால் வெளியிடப்பட்டது. இது கத்தோலிக்கத் திரு அவை மற்ற மதங்களோடு கொண்டிருக்க வேண்டிய உறவு பற்றிய ஆவணமாகும்.
உலக மதங்களின் பிரதிநிதிகள் மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடல் ஆணையத்தின் அதிகாரிகளைச் சந்தித்த திருத்தந்தை, "அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, கத்தோலிக்கத் திரு அவை மற்ற மதங்களுடனான உறவு குறித்த இரண்டாவது வத்திக்கான் சங்கத்தில் கலந்துரையாடியதும் அதன் வெளிப்பாடாக இவ்வேட்டின் மூலம், "மதங்களுக்கு
இடையே உரையாடலுக்கான நம்பிக்கையின் விதை நடப்பட்டது." என்றும் கூறினார்.
மேலும், "இன்று இந்த விதை ஒரு வலிமையான மரமாக வளர்ந்து சாட்சியமளிக்கிறது; அதன் கிளைகள் தொலைதூரத்தை அடைந்து, தங்குமிடம் வழங்குகின்றன; புரிதல், நட்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதியின் வளமான பலன்களைத் தருகின்றன" எனவும் திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.
மேலும், "நம்பிக்கை" மற்றும் "பயணம் "இவ்விரண்டும் நமது அனைத்து மத மரபுகளுக்கும் பொதுவானவை" என்று குறிப்பிட்ட அவர், "உரையாடல் என்பது ஒரு திட்டமிட்ட செயல்பாடோ அல்லது கருவியோ அல்ல; மாறாக, அது ஒரு வாழ்க்கை முறை; கேட்பவரையும் பேசுபவரையும் சம்பந்தப்பட்ட அனைவரையும் மாற்றும் இதயப் பயணம்" என விளக்கம் அளித்தார்.
"நம்பிக்கையில் இணைந்து நடப்பது என்று நமது நம்பிக்கைகளைச் சமரசம் செய்வதன் மூலம் அல்ல; மாறாக நமது நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம்" என்று கூறிய திருத்தந்தை, "உண்மையான உரையாடல் சமரசத்தில் அல்ல; மாறாக, உறுதியுடன் தொடங்குகிறது. நமது சொந்த நம்பிக்கையின் ஆழமான வேர்களில், அன்பில், மற்றவர்களை அடைய நமக்கு வலிமை அளிக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
Daily Program
 
 
             
     
 
   
   
   
   
  