ஒரு தொலைபேசி அழைப்பு ஒரு செபமாக | Veritas Tamil

 

ஒரு தொலைபேசி அழைப்பு ஒரு செபமாக  மாறுகிறது. 


முன்னாள் விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் மற்றும் திருத்தந்தை  லியோ XIV ஆகியோருக்கிடையிலான உரையாடல். நிலவில் கால் பதித்த 56வது ஆண்டை நினைவுகூரும் போது, ஒரு ஜெப தருணமாக மாறுகிறது. தகவல் தொடர்பு அலுவலகத்தின் ஆணையாளர், இது எவ்வாறு ஒவ்வொரு மனித உயிரின் புனிதத்தையும் வலியுறுத்தி, போர்களால் சிதைந்த உலகில் அமைதிக்கான அவசரமான தேவையை உணர்த்துகிறது என்பதைக் குறித்து சிந்திக்கிறார்.

சரியாக 56 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் கால் பதித்த இரண்டாவது மனிதரான பஸ் ஆல்ட்ரினுடனான தொலைபேசி அழைப்பில், பூமி மேலே இருந்து எப்படி இருக்கிறது என்பதைத் தன் கண்களால் பார்த்தவர்.

படைப்பின் மர்மம், அதன் மகத்துவம் மற்றும் அதன் பலவீனம் பற்றி திருத்தந்தை   பதினான்காம் லியோ ஒரு தொலைநோக்கி மூலம் வானத்தின் அழகை சிந்தித்த பிறகு பேசிய வார்த்தைகள்.


காசா நகரத்தில் உள்ள புனித குடும்பத்தின் கத்தோலிக்க திருஅவையின் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்கிய பிறகு, போரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல், மோதலுக்கு அமைதியான தீர்வைத் தேடுதல், மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிதல், பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையை மதித்தல், கூட்டுத் தண்டனையைத் தடை செய்தல். கண்மூடித்தனமாக பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல்,. மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்தல் போன்ற பல கருத்துக்களை குறித்து  திருத்தந்தையின் இதயப்பூர்வமான வேண்டுகோள்.

தேவாலயத்தின் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று பேரின் பெயர்களை ஒவ்வொன்றாக உச்சரிப்பதற்கான தேர்வு. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அல்ல, மாறாக ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் புனிதமானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக. பாதிக்கப்பட்டவர்கள் வெறும் இறந்தவர்களின் எண்ணிக்கை பட்டியலில் இடம்பெறுபவர்கள் அல்ல மாறாக இவர்களுக்கென்று  ஒரு பெயர்  ஒரு குடும்பப்பெயர்,  மற்றும் ஒரு கதை; என அனைத்தையும் கொண்டவர்கள். 

இந்த தருணங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. ஓவியங்களைப் போல. காலத்திற்கு நெருக்கமானவை, ஆனால் வேறுபட்டவை. அவை அமைதியின் அர்த்தத்தையும், போரின் முட்டாள்தனத்தையும் பற்றி ஒரே விஷயத்தைச் சொல்கின்றன. செயல்கள், படங்கள் மற்றும் வார்த்தைகள் ஆகியவற்றால் உருவாகும் தொடர்பு, ஆயுதமற்றதாகவும், எதிரியை மனதில் இருந்து ஆயுதம் கைவிடச் செய்யக்கூடியதாகவும் இருக்க முடியும் என்பதை அவை விளக்குகின்றன.


ஒரு குறிப்பிட்ட தருணத்தில், பஸ் ஆல்ட்ரினுடனான தொலைபேசி அழைப்பு ஒரு செபமாக  மாறுகிறது. திருப்பாடல்  8, அது இறைவனிடம் அவரது படைப்புகளின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது: வானம், சந்திரன், நட்சத்திரங்கள், பின்னர் மனிதன் இவை அனைத்தும் மிக சிறிவை ஆனால் மிகப் பெரியது. சந்திரனில் இருந்து கூடத் தெரியாத ஒரு சிறிய புள்ளி. இறுப்பினும்  மனிதனை படைப்புகளுக்கு தலைவராக  ஆக்கியுள்ளீர்கள்; எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்."

எதற்கு? ஆம்— எதற்கு ?

நம் ஒவ்வொருவரின் பொறுப்பையும்  விளக்க ஒரு சில வார்த்தைகளும் ஒரு சில படங்களும் போதுமானது. சொல்லப்பட்ட மற்றும் சொல்லப்படாத விஷயங்களுக்குஇ செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத விஷயங்களுக்கு. ஒரு நிமிடம் நிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கு மிகக் குறைந்த நேரமே ஆகும் என்பதை உணர. மேலும், அவர்கள் தாங்கி நிற்கும் உண்மையோ அல்லது அவர்கள் அனுபவித்த துன்பமோ, அப்பாவி மனித உயிர்களின் அழிவை நியாயப்படுத்தும் அளவுக்கு முழுமையானது என்பதை யாரும் நம்ப முடியாது என்பதைப் புரிந்துகொள்வது.

ஏனென்றால் மனித கண்ணியத்தை மீறுவது என்பது,  நாம் யாருடைய சாயலில் படைக்கப்பட்டோமோ, அந்த கடவுளை அவமதிப்பதாகும். நாம் அனைவரும் பிறந்த வரலாற்றை மறுப்பது மற்றும் நமது பொதுவான வீடான படைப்பின் அதிசயத்தை அழிப்பது.

2013 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற கிராவிட்டி திரைப்படத்தில், இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து பூமியைப் போற்றுதலுடன் பார்க்கிறார்கள். ஒருவர் மற்றவரிடம் கேட்கிறார்: "நீங்கள் எங்கே உங்கள் கூடாரத்தை அமைத்தீர்கள்?" யோவான் நற்செய்தியின் முன்னுரையில் கடவுளின் வார்த்தை "நம்மிடையே தம் கூடாரத்தை அமைத்தார்" என்று கூறுவதால் இவை சக்திவாய்ந்த வார்த்தைகள்.

போரினால் சிதைக்கப்பட்ட நமது இந்த சிறிய கிரகம், படைப்பின் செயலில் பொறிக்கப்பட்ட வாக்குறுதியால் மிகவும் வளமானது: கடவுள் தாமே அதில் வசிக்கத் தேர்ந்தெடுத்தார், அவ்வாறு செய்வதன் மூலம் அதை மீட்டுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார். அதனால்தான் அதை அழிக்கும் போர்கள் இறுதியில் வெற்றிபெறாது.