வளரும் நாடுகளுக்கான கடன் நிவாரணம் ஒரு "அறநெறிப் பொறுப்பு" | Veritas Tamil

வளரும் நாடுகளுக்கான கடன் நிவாரணம் ஒரு "அறநெறிப் பொறுப்பு"- திருதந்தையின் திருப்பீடம்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான திருப்பீடம் வறுமையை ஒழிப்பதற்கான திருஅவையின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவ கடன் நிவாரணத்துடன் உதவ வளர்ந்த நாடுகளை அழைக்கிறது.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான திருதந்தையின் திருப்பீடத்தின் நிரந்தர பொறுப்பாளரான பேராயர் கேப்ரியல் காசியா, ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது குறித்த இரண்டு ஐ.நா. குழுக்களிடையே உரையாற்றினார். நாடுகள் நிலையான வளர்ச்சியை அடைய உதவும் "அறநெறி மற்றும் அரசியல் பொறுப்பை" சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை பேராயர் உறுதிப்படுத்தினார்.
ஜூலை 16 அன்று நியூயார்க்கில் இரண்டு உரைகளில் அவர் குறிப்பாக சிறிய தீவு வளரும் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் குறித்து கவனம் செலுத்தினார்.
"வறுமையின் தொடர்ச்சியான மற்றும் பரவலான யதார்த்தம், மில்லியன் கணக்கான மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. அவர்களின் பொருளாதாரம், நல்வாழ்வை மறுத்து, கடவுள் கொடுத்த கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதே நேரத்தில் அவர்களின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியைத் தடுக்கிறது" என்று பேராயர் காசியா கூறினார்.
சர்வதேச சமூகம் வறுமையை ஒழிக்கும் இலக்கில் திருப்பீடம் கவனம் செலுத்த வேண்டும் என்று உறுதியாக நம்புவதாக அவர் மேலும் கூறினார். இதை அவர் "அறநெறி கட்டாயம்" மற்றும் "ஒரு பொருளாதாரப் பயிற்சி" என்று அழைத்தார்.
பல வளரும் நாடுகள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தும் சுமையுடன் போராடுகின்றன. 3.4 பில்லியன் மக்கள் சுகாதாரம் மற்றும் கல்விக்காகச் செலவிடுவதை விட வட்டி செலுத்துதலுக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் வாழ்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
"கடன் நிவாரணம் வழங்குவது தாராள மனப்பான்மையின் செயல் அல்ல, மாறாக ஒருங்கிணைந்த வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கு நாடுகளுக்குத் தேவையான நிதி இடத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசியமான படியாகும்" என்று அவர் கூறினார்.
எனவே "ரத்து செய்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட உடனடி கடன் நிவாரணம்" மற்றும் நீடிக்க முடியாத கடன் அளவுகளுடன் போராடும் நாடுகளுக்கு மானியங்களை அணுகுவதற்கு பேராயர் காசியா அழைப்பு விடுத்தார்.
சிறிய தீவு வளரும் நாடுகள் மீது கவனம் செலுத்திய அவர், ஐ.நா.வின் 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை உலகம் அடைவதற்கு அவற்றின் கடன் சுமைகள் மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக உள்ளன என்றார்.
இந்த நாடுகளில் சுமார் 40 சதவீதம் கடன் நெருக்கடியில் உள்ளன. மேலும் வளரும் நாடுகளை பெருமளவில் பாதிக்கும் சுற்றுச்சூழல் கடன் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகளால் அதிக சுமையைச் சுமக்கின்றன.
"கடன் நிவாரணம் மட்டும் ஒரு சர்வரோக நிவாரணி அல்ல" என்று பேராயர் காசியா கூறினார். "இருப்பினும், உள்கட்டமைப்பு, காலநிலை தழுவல், சுகாதார அமைப்புகள் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய தூண்களில் முதலீடு செய்வதற்கான நிதி இடத்தை வழங்குவதன் மூலம் சிறிய தீவு வளரும் நாடுகளின் வளர்ச்சி வாய்ப்புகளை மாற்றும் ஆற்றலை இது கொண்டுள்ளது."
"திருத்தந்தை லியோ XIV வலியுறுத்தி கூறியது போல், "இந்த ஆண்டு கத்தோலிக்க திருஅவையால் கொண்டாடப்படும் யூபிலி ஆண்டு, நியாயமற்ற முறையில் குவிக்கப்பட்ட செல்வங்களை மீண்டும் வழங்கவும் மற்றும் பகிரவும் அழைக்கிறது. இதுவே தனிப்பட்ட மற்றும் சமூக இணக்கத்திற்கான வழி’ என்றும் அவர் கூறினார்.
Daily Program
