மதுரை உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் - மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து | Veritas Tamil

மதுரை உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் - மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து
தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க திருஅவைக்கு மகிழ்ச்சியான செய்தி. திருத்தந்தை லியோ XIV ஜூலை 5 அன்று மதுரை உயர் மறைமாவட்டத்தின் ஏழாவது பேராயராக மேதகு அந்தோணிசாமி சவரிமுத்துவை நியமித்தார். இது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இயேசுசபையின் பணித்துவதையும் மற்றும் துடிப்பான உயர் மறைமாவட்டங்களில் ஒன்றின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்தது.
பேராயர் சவரிமுத்து டிசம்பர் 8, 1960 அன்று பிறந்தார். மேலும் ஏப்ரல் 26, 1987 அன்று பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்கான அருட்பணியாளராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 20, 2019 அன்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸால் பாளையங்கோட்டையின் ஆயராக நியமிக்கப்பட்டார்.
அவரது ஆரம்பகாலப் பயிற்சி மதுரையில் உள்ள புனித பீட்டர் இளங்குருமடத்திலும், பின்னர் பெங்களூரில் உள்ள புனித பேதுரு போன்டிஃபிகல் குருமடத்திலும் படித்தார். அவர் பாரிஸ்ல் அமைந்துள்ள கத்தோலிக்க நிறவனத்தில் (nstitut Catholique de Paris) உயர் கல்வியை தொடர்ந்தார், மற்றும் திருஅவையின் திருச்சட்டத்தில் முனைவர் பட்டம் என இரண்டையும் பெற்றார்.
பல ஆண்டுகளாக, பாளையங்கோட்டையில் உள்ள இளங்குருமட்த்தில் பேராசிரியராகவும், கருமாத்தூரில் உள்ள கிறிஸ்து மண்டபம் குருமடத்தின் தலைவராகவும், பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதன்மை மேய்ப்பாளராகவும் மற்றும் பெங்களூரில் உள்ள புனித பேதுரு பேராயர் மறைச்சான்றோன் கல்வியகத்தில் அமைந்துள்ள திருச்சட்டப் பண்பாட்டு நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆயராக நியமிக்கப்படும் போது மதுரை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார்.
இவரது ஞானம், கல்விசார் சிறப்பு மற்றும் மறைபரப்புபணியாளருக்கே உரித்தான மனப்பான்மை ஆகிய பண்புகள் இவரை மதுரை மறைமாவட்டத்திற்கு ஒரு திறமையான தலைவராக நிலைநிறுத்துகிறது.
மதுரை மறைமாவட்டம், மலபார் மாகாணத்தின் ஆரம்பகால பிரெஞ்சு இயேசு சபையின் மறைபணியாளர்களால் நிறுவப்பட்டு மதுரையில் வேரூன்றியது. அருட்தந்தை ராபர்ட் டி நோபிலி, புனித அருட்தந்தை அருளானந்தர், அருட்தந்தை வீரமாமுனிவர் மற்றும் அருட்தந்தை ஜேம்ஸ் டி ரோஸி போன்ற முன்னோடிகள் இந்தப் பகுதியில் கத்தோலிக்க நம்பிக்கையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தனர். 1693 ஆம் ஆண்டு ஓரியூரில் மறைசாட்சியாக மரித்த புனித அருளானந்தர் இம்மறைமாவட்டத்தின் பாதுகாவலர் ஆவார்.
மதுரை உயர் மறைவாட்டத்தின் அதிகார வரம்பின் கீழ் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஏழு மறைமாவட்டங்கள் அமைந்துள்ளன.
பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் நியமனம் மதுரை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது.தொலைநோக்கு பார்வை, மறைப்பணியாளருக்கே உரித்தான ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் ஊறிய ஒரு பாரம்பரியத்துடனும் புதிய உத்வேகத்துடனும், பணித்துவ சிந்தைனையோடும் புதிய எழுச்சியோடும் செயலாற்ற உள்ளது. இவர் பணிசிறக்க செபிப்போம்.
Daily Program
