அமெரிக்க ஜனாதிபதிக்கு திருப்பலி நிறைவேற்றிய இந்திய அருள்பணியாளர்.|| வேரித்தாஸ் செய்திகள்

கர்தினால்  ஜீன்-கிளாட் ஹோலெரிச் நான்காவது பொது அமர்வினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
கர்தினால் ஜீன்-கிளாட் ஹோலெரிச் நான்காவது பொது அமர்வினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிபருக்கு திருப்பலி நிறைவேற்றிய இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் அவர் தங்கி இருந்த இடத்தில திருப்பலி நிறைவேற்றும்படி  கோரிக்கை விடுத்தார்.

டெல்லி  உயர் மறைமாவட்டத்தின் திருவழிபாட்டு ஆணையத்தின் செயலாளரான தந்தை நிக்கோலஸ் டயஸ், இந்திய தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தால்  அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தனிப்பட்ட முறையில் திருப்பலி நிறைவேற்றுமாறு  வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஜி20 உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் தங்கியிருந்த மவுரியா ஷெரட்டன் ஹோட்டலில் செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு அருள்தந்தை டயஸ் திருப்பலி நிறைவேற்றினார். 

இந்திய தலைநகரில், ஜனாதிபதி ஜோ பைடன் உச்சிமாநாட்டிற்கு முன்பாக இறைவனின் வரம் வேண்டி  ஜெபம் செய்து தனது பணிகளை தொடங்கிய விரும்பிய அதிபருடன்  மேலும் ஒரு சில கத்தோலிக்கர்கள் அவரது தனிப்பட்ட அறையில் திருப்பலியில்  கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 9  ம்  தேதி  முதல் 10 ம்  தேதி வரை நடைபெற்ற  உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி  ஜோ பைடன் புனித நற்கருணையையைப் பெற விரும்புவதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் திருப்பலியில் போது மன்றாட்டுகளை வாசித்து தனது விண்ணப்பங்களையும் இறைவனிடம் சமர்ப்பித்தார்.  திருப்பலி முடிந்த பிறகு தனது கத்தோலிக்க நம்பிக்கையைப் பற்றியும் தனது இறை அனுபவம் பற்றியும்  அருள்தந்தை டயஸுடன் பகிர்ந்து கொண்டார்.

30 நிமிட திருப்பலிக்கு  பிறகு அமெரிக்க ஜனாதிபதியின் முத்திரை அருள்தந்தை  டயஸிடம் வழங்கப்பட்டது. இந்த முத்திரை சிறப்புச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த முத்திரையின்  எண் 261 ஆகும்.

 கோவாவை பூர்வீகமாகக் கொண்ட அருள்பணியாளர் டயஸ், மேற்கு இந்திய மாநிலத்தில் இனிப்புகளின் ராணி என்று அழைக்கப்படும் இந்தோ-போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் விரும்பி உண்ணும்  பெபின்கா என்னும் இனிப்பு வகையை  ஜனாதிபதி அவர்களுக்கு   பரிசளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து என கொடுப்பது என தவித்த வேளையில் இனிப்புகள் ராணி என்று அழைக்கப்படும் சிறந்த இனிப்பை அதனை ஜனாதிபதிக்கு பரிசாக வழங்குவது என கடைசி நேரத்தில் தீர்மானித்தேன் என அருள்தந்தை டயஸ் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்க தூதரகம் திருப்பலியில்  கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை மிக குறைந்த அளவிலேயே  அனுமதி அளித்திருந்தது. மேலும் அவர் தூதரக ஊழியர்களால் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

-அருள்பணி வி.ஜான்சன்

https://www.rvasia.org/asian-news/indian-priest-celebrates-private-mass-us-president